பிளாப் கொடுத்தும் திருந்தலயே!.. இயக்குனர்களை தொடர்ந்து கடுப்பேற்றி வரும் விஜய் ஆண்டனி!..
தமிழ் சினிமாவில் சவுண்ட் என்ஜினியராக வேலை செய்து வந்த விஜய் ஆண்டனி ஒரு கட்டத்தில் இசையமைப்பாளராக மாறினார். இவரின் இசையில் வெளிவந்த பல பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்திருக்கிறது. விஜய் நடித்து வெளியான வேட்டைக்காரன், வேலாயுதம் போன்ற படங்களுக்கும் இசையமைத்தவர் இவர்தான்.
இவர் இசையமைத்து பாடி வெளியான நாக்க மூக்க பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. நான் திரைப்படம் மூலம் நடிக்கவும் துவங்கினார். அந்த படம் ஹிட் அடிக்கவே தொடர்ந்து சினிமாவில் நடித்தார். அப்படி அவர் நடித்து வெளியான சலீம், பிச்சைக்காரன் ஆகிய படங்கள் வசூலை அள்ளவே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறினார். இவரின் படங்கள் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வசூலை பெற்றது.
தான் நடிக்கும் படங்களை விஜய் ஆண்டனியே தயாரிக்க துவங்கினார். ஒருகட்டத்தில் இயக்குனர் அவதாரமும் எடுத்தார். அப்படி அவர் இயக்கி வெளிவந்த பிச்சைக்காரன் 2 படமும் நல்ல வசூலை பெற்றது. சவுண்ட் என்ஜினியர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என எல்லாவற்றிலும் வெற்றி கிடைத்தது.
இதையடுத்து தான் நடிக்கும் படங்களின் எடிட்டிங் வேலையையும் அவரே செய்ய துவங்கினார். பொதுவாக தன்னுடைய படம் எடிட்டிங்கில் எப்படி வர வேண்டும் என் இயக்குனரே முடிவு செய்வார். ஆனால், விஜய் ஆண்டனி தயாரிப்பாளர் என்பதால் சில இயக்குனர்களால் அவரை தடுக்க முடியவில்லை.
கடைசியாக வெளியான ரோமியோ படத்திலும் அதே வேலையை பார்த்தார் விஜய் ஆண்டனி. புளூசட்ட மாறன் கூட இதை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில்தான் இப்போது விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்திலும் தனது சித்து வேலையை காட்டி இருக்கிறார் விஜய் ஆண்டனி. இயக்குனருக்கு தெரியாமலேயே படத்தின் துவக்கத்தில் ஒரு நிமிட காட்சியை சேர்த்துவிட்டார். இது எனக்கு தெரியாது. இது படத்தையே கெடுத்துவிட்டது என விஜய் மில்டன் வீடியோவும் வெளியிட்டி புலம்பி இருக்கிறார்.
விஜய் ஆண்டனி இப்போது நடித்து வரும் ஹிட்லர் என்கிற படத்திலும் எடிட்டிங்கில் தலையிட முயற்சி செய்திருக்கிறார். ஆனால், அப்படத்தின் இயக்குனர் ‘விஜய் ஆண்டனி இந்த பக்கமே வரக்கூடாது’ என தடைபோட்டார். அதையும் மீறி எடிட்டிங்கில் கை வைக்க போயிருக்கிறார் விஜய் ஆண்டனி. விஜய் ஆண்டனியிடம் கோபம் காட்டி வெளியே அனுப்பிவிட்டார் இயக்குனர். ஆத்திரத்தில் எடிட்டரையும், தயாரிப்பு நிர்வாகியையும் திட்டிவிட்டு பஞ்சாயத்தை தயாரிப்பாளரிடம் கொண்டு போயிருக்கிறார் விஜய் ஆண்டனி. ஆனால், தயாரிப்பாளரோ இயக்குனர் பக்கம் நின்றுவிட்டார்.
இப்படி தொடர்ந்து விஜய் ஆண்டனி இயக்குனர்களின் வேலையில் தலையிடுவது திரையுலகில் புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.