Vijay Antony: தொடர் தோல்வி!.. கப்சிப் மோடில் இருக்கும் விஜய் ஆண்டனி... என்ன பண்றது ஆடுனா ஆட்டம் அப்படி!...

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:29:14  )

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பல வெற்றி திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் விஜய் ஆண்டனி. அதன் பிறகு நான் இந்த திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அவதாரம் எடுத்தார். அந்த திரைப்படம் இவருக்கு நல்ல ஒரு வரவேற்பை கொடுத்தது. முதல் படமே இவருக்கு நல்ல வெற்றியை கொடுத்த காரணத்தால் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.

அந்த வகையில் சலீம், பிச்சைக்காரன், சைத்தான், எமன், காளி, திமிருபுடிச்சவன் உள்ளிட்ட அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வந்தார். அதிலும் பிச்சைக்காரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இதனால் பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை இவரே இயக்கி தயாரித்திருந்தார்.

இந்த திரைப்படமும் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக ஒரு வெற்றி படமாக அமைந்தது. அடுத்ததாக இவர் நடித்த ரோமியோ திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. பின்னர் கடைசியாக விஜய் மில்டன் இயக்கத்தில் மழை பிடிக்காத மனிதன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை.

கடைசியாக நடித்த திரைப்படம் ஹிட்லர். இந்த திரைப்படமும் தோல்வியை தான் சந்தித்தது. பிச்சைக்காரன் 2 திரைப்படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி பார்த்து பார்த்து நடித்த படங்கள் அனைத்துமே தோல்வியை சந்தித்ததால் மிகுந்த மன வருத்தத்தில் இருக்கின்றார். அது மட்டும் இல்லாமல் அவர் ஒரு படத்தில் அனைத்து வேலைகளிலும் மூக்கை நுழைத்து வருவதாகவும் இயக்குனரை சுதந்திரமாக செயல்பட விடுவதில்லை என்றும் சமீப நாட்களாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது.

அதனால் தான் படங்கள் சரியாக ஓடுவதில்லை என்றும் சினிமா விமர்சகர்கள் பலரும் கூறி வந்தார்கள். அதன் காரணமாக நடிகர் விஜய் ஆண்டனி தற்போது தான் உண்டு தான் வேலை உண்டு என்று இருந்து வருகிறாராம். படப்பிடிப்புக்கு சென்றால் தனது காட்சிகளை நடத்தி முடித்துவிட்டு வீடு திரும்பி விடுகிறார். வேறு எந்த விஷயத்திலும் அவர் தலையிடுவதில்லை என்று கூறப்படுகின்றது.

தற்போது பிரபல எடிட்டர் லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி ககன மார்க்கம் என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தின் மீது ஏகப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கின்றார் விஜய் ஆண்டனி. அதுமட்டுமில்லாமல் தனது சொந்த தயாரிப்பில் கூட ஒரு படத்தை எடுத்து வருகின்றாராம்.

இந்த திரைப்படத்தை அருவி என்கின்ற திரைப்படத்தை இயக்கிய அருண் பிரபு புருஷோத்தமன் இப்படத்தை இயக்கி வருவதாகவும், படத்தின் வேலைகள் 90% முடிந்து விட்டதாக கூறப்படுகின்றது. தான் சொந்தமாக தயாரித்தால் கூட அந்த படத்தின் இயக்கம், எடிட்டிங் என்று எதிலுமே தலையிடாமல் இருந்து வருகின்றாராம். அதுமட்டுமில்லாமல் விஜய் ஆண்டனி விரைவில் பிச்சைக்காரன் 3 திரைப்படத்தை எடுக்க இருப்பதாகவும் ஒரு தகவல் பரவி வருகின்றது.

Next Story