ஐயோ அவசரப்பட்டு நடிக்கமாட்டேன்னு சொல்லிட்டேன்!.. வெங்கட்பிரபுவிடம் சொன்ன விஜய்?!...

by ராம் சுதன் |

லியோ படத்திற்கு பின் விஜய் நடித்திருக்கும் திரைப்படம் கோட். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதற்கு காரணம் அந்த படத்தின் மீதிருந்த அதிகமான எதிர்பார்ப்புதான். சமூகவலைத்தளங்களில் பலரும் லியோவை பற்றியே பேசினார்கள்.

ஆனால், படத்தின் 2ம் பாதி ரசிகர்களை கவரவில்லை. எனவே, படம் பார்த்த பலருக்கும் அப்படம் ஏமாற்றமாக இருந்தது. அந்த படத்திற்கு பின் யாரும் எதிர்பார்க்காத வகையில் வெங்கட்பிரபுவிடம் கூட்டணி அமைத்தார் விஜய். இந்த படத்தில் விஜய் அப்பா, மகன் என் இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும், மகன் விஜயை டீஏஜிங் மூலம் இளமையாக காட்ட ஹாலிவுட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தப்போவதாகவும் சொல்லப்பட்டது.

இதற்காக விஜய், வெங்கட்பிரபு ஆகியோர் அமெரிக்காவுக்கும் போனார்கள். எனவே, இப்படத்தின் மீது எதிர்ப்பார்ப்பும் அதிகரித்தது. அதோடு, விஜயுடன் பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் போன்றவர்களும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. அப்பா விஜய்க்கு சினேகாவும், மகன் விஜய்க்கு மீனாட்சி சவுத்ரியும் நடிப்பதாக சொல்லப்பட்டது.

இந்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே விரைவில் தான் அரசியலுக்கு வரப்போவதாகவும், அடுத்த சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் எனவும், இப்போது ஒத்துக்கொண்டுள்ள படத்தில் மட்டுமே நடிப்பேன் எனவும் விஜய் அறிவித்தார். இது திரையுலகினருகும், விஜய் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

ஒருபக்கம் கோட் படத்தின் வேலைகள் வேகமாக நடந்தது வந்தது. இப்போது படப்பிடிப்பு முடிந்து பின்னணி இசை போன்ற சில பணிகள் நடந்து வருகிறது. ஏற்கனவே படத்தின் முதல் பாதியை விஜய் பார்த்துவிட்டு வெங்கட்பிரபுவை பாராட்டியதாக செய்திகள் வெளியானது. அதன்பின் 2ம் பாதி தொடர்பான பணிகளை வெங்கட்பிரபு செய்து வந்தார்.

இந்நிலையில், முழு படத்தையும் விஜய் பார்த்துவிட்டு ‘கலக்கிட்ட!.. அவசரப்பட்டு ரிட்டயர்மெண்ட் அறிவிச்சிட்டேன். இன்னும் ஒரு படம் உன் கூட பண்ணி இருக்கலாம்’ என சொன்னதாக செய்திகள் கசிந்திருக்கிறது. ஒருபக்கம், கடைசியாக வெளியான பாடலில் விஜயின் டீ ஏஜிங் முகம் ட்ரோலுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

Next Story