விரைவில் மாநாடு.. தளபதி 69-ல் விஜய் எடுத்த முக்கிய முடிவு!.. இது அவர் லிஸ்ட்லயே இல்லயே!...
Thalapathy69: தமிழ் திரையுலகில் வசூல் மன்னனாக வலம் வருபவர் நடிகர் விஜய். அவர் நடிக்கும் படங்கள் தொடர்பாக கலவையான விமர்சனங்கள் வந்தாலும் வசூலில் ஒன்னும் குறை இருப்பதில்லை. குறைந்த பட்சம் 300 கோடியை தாண்டி அவரின் படங்கள் வசூல் செய்து விடுகிறது. அதனால்தான் விஜய் கேட்கும் சம்பளத்தை கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள்.
கோட் படத்தில் 200 கோடி சம்பளம் அவருக்கு கொடுக்கப்பட்டது. அந்த படம் 450 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. படத்தின் பட்ஜெட் 400 கோடி என்றாலும் தியேட்டர் வசூல் போக சேட்டிலைட், ஓடிடி, ஹிந்தி பட உரிமை, ஆடியோ உரிமை என இதையெல்லாம் கணக்கு போட்டால் தயாரிப்பாளருக்கு எப்படியும் 150 கோடிக்கும் மேல் லாபம் வரும் என கணிக்கப்படுகிறது.
ஒருபக்கம், விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்திருக்கிறார். விரைவில் மாநாடு நடக்கவிருக்கிறது. அதோடு, ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ள படம் தனது கடைசிப்படம் எனவும் விஜய் சொல்லி இருக்கிறார். ஆனால், 2026 சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பின் விஜய் மீண்டும் சினிமாவுக்கு வருவார் என சிலர் சொல்கிறார்கள்.
விஜய் சினிமாவை விட்டு போகக்கூடாது என்பது திரையுலகினரின் விருப்பம் மட்டும்மல்ல, ரசிகர்களின் விருப்பமும் அதுதான். இதற்கிடையில் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ள புதிய படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடந்து அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் வெளியானது.
இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரகாஷ்ராஜ் என பலரும் நடிக்கவுள்ளனர். வழக்கமாக விஜய் மாலை 6 மணி வரை மட்டுமே படப்பிடிப்பில் இருப்பார். அதன்பின் வீட்டிற்கு கிளம்பிவிடுவார். ஞாயிற்றுக்கிழமை படப்பிடிப்பில் கலந்துகொள்ள மாட்டார். அதேபோல், சொல்லும் நாட்களுக்கும் படப்பிடிப்பை முடித்துவிட வேண்டும் என நினைப்பார். இது பல வருடங்களாக அவர் பின்பற்றி வருகிறார்.
ஆனால், தளபதி 69 படத்திற்கு மாதம் 20 நாட்கள் நடித்துவிட்டு மீதி 10 நாட்கள் மாநாடு தொடர்பான வேலைகளை பார்க்க போகிறாராம். வாரத்தில் ஒரு நாள் மட்டும் விடுமுறை என்பது அரசியலுக்கு செட் ஆகாது என விஜய் நினைத்திருப்பதே இந்த முடிவுக்கு காரணம் என சொல்லப்படுகிறது.