தனக்குத் தானே ஆப்பு வைக்கிறது இதுதான்! கோட் பட பாடல் விமர்சனத்திற்கு யுவன் சொன்ன பதில்
விஜய் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கோட். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சினேகா, மீனாட்சி சாவித்திரி நடித்திருக்கின்றனர். படத்திற்கு யுவன் ஷங்கர்ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தில் விஜய் இரு வேடங்களில் நடித்திருக்கிறார்.
இதில் மகன் வேடத்தில் நடிக்கும் விஜய் மிகவும் இளமையாக தெரிய வேண்டும் என்பதற்காக டிஏஜிங் டெக்னிக் பயன்படுத்தி அந்த தோற்றத்தை வடிவமைத்திருக்கிறார்கள். இதற்காக விஜய் அமெரிக்காவிற்கு சென்று அந்த டெக்னிக் மூலமாக அவருடைய தோற்றத்தை இந்த படத்தில் பயன்படுத்திக் கொண்டார்கள்.
இந்த நிலையில் படத்தின் போஸ்டர்கள், மூன்று பாடல்கள் வெளியான நிலையில் படத்தின் மீது ஒரு பக்கம் விஜய் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பை வைத்திருந்தாலும் இன்னொரு பக்கம் கதி கலங்கி போயிருக்கின்றனர். அதற்கு காரணம் படத்தில் அமைந்த பாடல்கள் தான்.
விஜய்க்கு உரிய பாடல் இந்த படத்தில் இல்லாதது ஒரு பெரிய குறையாக பார்க்கப்படுகிறது. இதற்கு முன் வெளியான வாரிசு, லியோ,பீஸ்ட் போன்ற படங்கள் விமர்சனம் ரீதியாக சரியான வரவேற்பை பெறாவிட்டாலும் பாடல்கள் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
ஆனால் கோட் திரைப்படத்தை பொருத்தவரைக்கும் மூன்று பாடல்கள் வெளியான நிலையிலும் ரசிகர்கள் திருத்தியடையாமல் இருக்கின்றனர் .அந்த அளவுக்கு இசையும் மோசமாக இருப்பதாக விமர்சித்து வருகிறார்கள். இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு அந்தணன் கூறும்போது யுவன் சங்கர் ராஜாவின் நெருங்கிய நண்பர் ஒருவரிடம் இதைப் பற்றி கேட்டாராம்.
அந்த அதற்கு அந்த நண்பர் கூறியது என்னவெனில் யுவன் சங்கர் ராஜா அவரிடமே வந்து இதற்கான விளக்கத்தை கொடுத்திருக்கிறார். அதாவது யுவன் சங்கர் ராஜா ஐந்து டியூன்கள் போட்டதாகவும் அதில் டியூனை தேர்வு செய்தது வெங்கட் பிரபு மற்றும் விஜயும் தான். அதிலும் கடைசியாக விஜய் தேர்வு செய்த்து தான் படத்தில் வைத்திருக்கிறார்கள் என்றும் கூறினாராம் யுவன் சங்கர் ராஜா.
இதைப் பற்றி அந்தணன் கூறும் போது விஜய் தேர்வு செய்த டியூன் தான் இது. அதற்கு போய் யுவனை அனைவரும் வசைப்பாடி வருகிறார்கள். பாவம் இவன் என்று கூறினார். இதற்கு மத்தியில் இந்த வீடியோவை பார்த்த பல பேர் ஐந்து டியூன்களில் இந்த டியூனை விஜய் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்றால் மற்ற நான்கு டியூன்கள் எந்த லட்சணத்தில் இருந்திருக்கும் என்பதை எங்களால் உணர முடிகிறது.
விஜயே வேண்டாம் வெறுப்பாக இது ஒன்னாவது நல்லா இருக்கேனு தேர்ந்தெடுத்து இருப்பார் என்று கமெண்டில் கூறி வருகின்றனர். இருந்தாலும் யுவனைப் பொறுத்த வரைக்கும் அவர் இசையில் வெளியான பாடல்கள் பெரும்பாலும் ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கின்றன.
மேலும் யுவன் கூறும்போது கடைசியாக வெளியான ஸ்டார் படத்தில் கூட நான் போட்ட இசையை அனைவரும் விரும்பத்தானே செய்தார்கள். இப்படி இருக்கும் போது கோட் திரைப்படத்திற்கு மட்டும் நான் மோசமான டியூனை போடுவேனா? நான் கொடுத்த 5 டியூனில் விஜய் செலக்ட் செய்தது தான் இது என்று கூறியதாக அந்தணன் தெரிவித்திருக்கிறார்.