TVK Vijay: நமக்கு ஒன்னும் வேணும்!. டிவி 'சேனல்' தொடங்கும் விஜய்?... பேருதான் ஹைலைட்டே!

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:28:58  )

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் விக்கிரவாண்டியில் அக்டோபர் 27ம் தேதி மாநாடு நடத்தினார். கட்சி ஆரம்பித்ததில் இருந்து, ட்விட்டரில் மட்டுமே அறிக்கைகளை வெளியிட்டு வந்த அவர் முதல்முறையாக மாநாடு நடத்தி அதிரடி காட்டினார்.

முதல் மாநாடு என்றாலும் பேசி ஒருவாரம் ஆகியும் கூட அதன் தாக்கம் குறையவில்லை. ஒருபுறம் சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க, மறுபுறம் விஜயோ 27 தீர்மானங்கள் நிறைவேற்றி மீண்டும் ஒரு புயலை கிளப்பி இருக்கிறார்.

2026 சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து விஜய் வியூகங்கள் வகுக்க, அரசியல் கட்சிகளும் இப்போதே அவரை வளைக்கத் தயாராகி வருகின்றன. குறிப்பாக அதிமுக இதற்காக முயற்சித்து வருவதாக தெரிகிறது, இந்தநிலையில் விஜய் 24 மணி நேர செய்தி சேனல் ஒன்றை ஆரம்பிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ்நாட்டில் கட்சி சார்பாக ஒவ்வொருவரும் செய்தி சேனல் வைத்துள்ளனர். அந்த வரிசையில் விஜயும் களமிறங்குகிறார். இதற்கிடையில் அவர் ஆரம்பிக்க இருக்கும் செய்தி சேனலுக்கு தமிழ் ஒளி என்று பெயர் வைக்க இருப்பதாக தெரிகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம் இந்த செய்தியில் உண்மையில்லை.. விஜய்க்கு தனியாக தொலைக்காட்சி துவங்கும் எண்ணமெல்லாம் இல்லை எனவும் அவரின் அரசியல் கட்சி வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. அறிவிப்பு வெளியானால் மட்டுமே இது உண்மையா என்பது தெரியவரும்.

Next Story