ரசிகர்களின் செயலால் விஜய் அதிர்ச்சி! பறந்த அதிரடி உத்தரவு.. அலர்ட்டா இரு ஆறுமுகம்

by ராம் சுதன் |

தற்போது விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் படக்குழு இறங்கி இருக்கிறது. இன்னொரு பக்கம் விஜய் தனது அரசியல் சம்பந்தமான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

விஜய் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான இந்த கோட் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சினேகா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் ஜோடியாக நடித்திருக்கின்றனர். மேலும் இவர்களுடன் இணைந்து பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், மோகன் உட்பட பல முக்கிய பிரபலங்கள் நடித்திருக்கின்றனர்.

படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இரு வேடங்களில் நடிக்கும் விஜய் இந்த படத்திற்காக டி ஏஜிங் டெக்னிக்கை பயன்படுத்தி யங் விஜையாக ஒரு வேடத்தில் நடித்து வருகிறார்.

அதனுடைய பிரதிபலிப்பு தான் சமீபத்தில் வெளியான கோட் படத்தின் மூன்றாவது சிங்கிள். அதில் முற்றிலுமாக 90கள் காலகட்டத்தில் இருந்த விஜயை அப்படியே காண்பித்து இருந்தார் வெங்கட் பிரபு. அதை ஒரு சிலர் விமர்சனமும் செய்து இருந்தனர். படம் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் என்று அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியாகியிருக்கின்றது.

இந்த நிலையில் படத்தின் ப்ரோமோஷன் குறித்து வெங்கட் பிரபு சமீபத்தில் ஒரு தகவலை தன்னுடைய இணையதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் கோட் திரைப்படத்திற்கு மிகப் பிரம்மாண்ட அளவில் ப்ரோமோஷன் செய்ய போவதாக கூறியிருந்தார்.

வானில் பதினான்கு ஆயிரம் அடி உயரத்தில் மலேசியாவில் இதற்கான ஒரு ப்ரோமோஷன் ஒன்று ஏற்பாடு செய்திருப்பதாக அந்த ஸ்டோரியில் பகிர்ந்து இருக்கிறார் வெங்கட் பிரபு. அது என்ன மாதிரியான ப்ரமோஷன் என்பது இனிமேல் தான் தெரியவரும். இந்த நிலையில் விஜய் ரசிகர்கள் கோட் படத்தின் ப்ரோமோஷனுக்காக கோட் பட போஸ்டரையும் விஜய் போஸ்டரையும் ஆங்காங்கே சுவர்களில் ஒட்டி வருகின்றனர்.

கூடவே தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் என்றும் அந்த போஸ்டரில் வாசகங்களை பதிவிட்டு வருகின்றனர். இது விஜய்க்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால் அவருடைய ரசிகர்களுக்கு திடீரென ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கிறார் விஜய். கோட் பட ப்ரோமோஷனுக்கு எந்த விதத்திலும் தன்னுடைய அரசியல் கட்சி பெயரை பயன்படுத்தக்கூடாது என்பதை கூறியிருக்கிறார் விஜய்.

Next Story