நண்பனுக்கு ஆபரேஷன்!. கலங்கி நின்ன மணிகண்டன்!.. விஜய் சேதுபதி செய்த உதவி!...

by சிவா |
mayilsamy
X

mayilsamy

Vijay sethupathi: திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் கோடிகளில் சம்பளம் வாங்குவார்கள். ஆனால், கஷ்டப்படுபவர்களுக்கு உதவ மாட்டார்கள். சிலர் மட்டுமே மற்றவர்களுக்கு உதவி செய்வார்கள். சிலர் உதவி செய்வது வெளியே தெரியும். சிலர் செய்வது தெரியாது. நடிகர் அஜித்தெல்லாம் பலருக்கும் மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட பல உதவிகளை செய்திருக்கிறார்.

ஆனால், அதை எங்கும் அவர் வெளியே சொன்னது இல்லை. உதவி பெற்ற சிலர் ஊடகங்களில் பேசும்போதுதான் அது வெளியே தெரியவரும். உதாரணத்திற்கு அஜித்திடம் ஒருவர் மருத்துவ உதவி கேட்டால் சிகிச்சைக்கான செலவை மருத்துவமனையில் கட்டிவிடுவார் அஜித். இதை பல வருடங்களாக அவர் செய்து வருகிறார்.

அதேபோல், மறைந்த நடிகர் மயில்சாமி, விவேக், சத்தியராஜ் உள்ளிட்ட பலரும் பலருக்கும் உதவி செய்துள்ளனர். ஆனால், இது எதையும் அவர்கள் வெளியே கூறியது கிடையாது. விவேக், சத்தியராஜ் போன்றவர்களிடம் பணம் வாங்கி பலருக்கும் கொடுத்திருக்கிறார் மயில்சாமி. அதேபோல், சினிமா மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று கிடைக்கும் பணத்தையும் அவர் பலருக்கும் பிரித்து கொடுத்துவிடுவார்.

மயில்சாமியை நம்பி பல குடும்பங்கள் வசித்து வந்தது. அவர்கள் எல்லோருமே சின்ன சின்ன காமெடி நடிகர்கள் மற்றும் திரைப்பட கலைஞர்களாக இருந்தவர்கள்தான். அதேபோல், நடிகர் விஜய் சேதுபதியும் பலருக்கும் பல வகைகளில் உதவி செய்திருக்கிறார். அதை எப்போதும் அவர் வெளியே சொல்லிகொண்டது இல்லை.

குடும்பஸ்தன் பட ஹீரோ மணிகண்டன் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘என் நண்பன் ஒருவனுக்கு அவசரமாக ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலை. 25 லட்சம் இருந்தால்தான் காப்பாற்ற முடியும் என மருத்துவமனையில் சொல்லிவிட்டார்கள். நான் விஜய் சேதுபதி அண்ணனிடம் தயங்கி தயங்கி இதை கேட்டேன். அடுத்த 10 நிமிடத்தில் என் அக்கவுண்டுக்கு பணம் வந்துடுச்சி. அந்த பணத்துல என் நண்பனை காப்பாற்றிவிட்டேன். இதை யாரிடமும் சொல்லவேண்டாம் என சொல்லிவிட்டார். இது மாதிரி அவர் நிறைய பண்ணியிருக்காரு’ என சொல்லியிருக்கிறார்.

ஏற்கனவே தனது தங்கையின் திருமணம் நடந்தபோது விஜய் சேதுபதி 3 லட்சம் பணம் கொடுத்து உதவி செய்தார். அதேபோல், எனது அம்மாவின் மருத்துவ சிகிச்சைக்கான செலவையும் அவர் ஏற்றுக்கொண்டார் என மணிகண்டன் சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story