2 மணி நேரம் அனல் பறக்க போகும் விஜயின் பேச்சு... எழுதிக் கொடுத்ததே இவர்தானாமே...!

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:33:04  )

தமிழ் சினிமாவில் 200 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகராக இருக்கும் விஜய் கடந்த சில மாதத்திற்கு முன்பு தமிழக வெற்றி கழகம் என்கின்ற கட்சியை அறிவித்தார். விரைவில் சினிமாவில் இருந்து விலகி முழு நேரமும் அரசியலில் ஈடுபட இருக்கின்றார். இந்நிலையில் இன்றைய தினம் தமிழகமே எதிர்பார்த்த தமிழக வெற்றிக்கழக கட்சியின் முதல் மாநாடு நடைபெற உள்ளது.

விக்கிரவாண்டியில் இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. கடந்த சில வாரங்களாகவே விஜய் மற்றும் கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொண்டு வந்தார்கள். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் முழு வீச்சுடன் நடைபெற்று முடிந்தது. காலை முதலே ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மாநாட்டிற்கு படையெடுத்து வருகிறார்கள்.

வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தன்னுடைய கட்சி தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்திருக்கின்றார். தொடர்ந்து கட்சியை பலப்படுத்துவதற்காக நடிகர் விஜய் பல விஷயங்களை செய்து வருகின்றார். அதில் ஒன்றுதான் இன்று நடைபெறும் மாநாடு. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி, வீ சாலையில் கிராமத்தில் நடக்க உள்ள இந்த மாநாட்டில் ஒரு அரசியல் கட்சியின் தலைவராக முதல் பேச்சை கொடுக்க இருக்கின்றார்.

ஆனால் தொண்டர்கள் மாநாட்டில் நடிகர் விஜய் எதெல்லாம் செய்யக்கூடாது என்று லிஸ்ட் போட்டு கூறினாரோ அதை எல்லாம் தான் செய்து வருகிறார்கள். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தண்ணீர் பற்றாக்குறை, வெயிலின் தாக்கம், தொண்டர்கள் மயக்கம் போட்டு விழுவது, போதிய சாப்பாடு இல்லை என பல குறைகள், விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொண்டர்கள் இன்று மாலை தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜயின் பேச்சை கேட்பதற்காக அங்கேயே காத்து கிடக்கின்றார்கள். மேலும் இன்று மாலை 6 மணி அளவில் தொடங்க இருக்கும் நிலையில் அவர் பேச இருக்கும் பேச்சை இயக்குனர் ஹெச் வினோத் தான் எழுதிக் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றது. நடிகர் விஜயின் கடைசி திரைப்படமான தளபதி 69 திரைப்படத்தை ஹெச் வினோத் தான் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story