Thalapathy 69: தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். மிக பிஸியான நடிகராக இருந்து வந்த விஜய் திடீரென்று அரசியலில் கால் பதித்திருக்கின்றார். கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் என்கின்ற கட்சியை தொடங்கியிருந்த விஜய் அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன் பிறகு கட்சியின் கொடி, பாடல், முதல் மாநாடு என அனைத்தையும் மிகச் சிறப்பாக செய்து முடித்து இருக்கின்றார்.
கட்சி அறிவித்த கையோடு சினிமாவை விட்டு விலகுவதாகவும் அறிவித்திருந்தார். அதன்படி தளபதி 69 என்கின்ற திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டு சினிமாவை விட்டு விலகி முழு நேரமும் அரசியலில் கவனம் செலுத்த இருப்பதாக கூறியிருந்தார். இது விஜய் ரசிகர்களிடையே மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தது. இருப்பினும் தமிழகத்திற்கு நடிகர் விஜய் மூலமாக நல்ல மாற்றம் கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
நடிகர் விஜய் கடைசியாக கோட் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். கடந்த வருடத்தில் பாக்ஸ் ஆபிஸில் அதிகம் வசூல் செய்த திரைப்படங்களில் முதல் இடத்தை கோட் திரைப்படம் பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து ஹெச் வினோத் இயக்கத்தில் தற்போது தளபதி 69 என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகின்றது. இப்படத்தில் நடிகர் விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ, பாபி தியோல், பிரியாமணி, கௌதம் வாசுதேவ் மேனன், நரேன் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
இந்த படத்தின் முதல் ஷெடியூல் கடந்த வருடம் முடிவடைந்த நிலையில் தற்போது பொங்கல் பண்டிகையை தொடர்ந்து இரண்டாவது ஷெட்யூல் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த திரைப்படத்தை கேவிஎன் புரொடக்சன் நிறுவனம் தயாரிக்கின்றது. தமிழில் இவர்கள் தயாரிக்கும் முதல் திரைப்படம் இதுவாகும். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது அடுத்த வருடம் பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என்று கூறி வருகிறார்கள்.
ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. மேலும் இந்த திரைப்படத்திற்கு நடிகர் விஜயின் அறிமுக படமான நாளைய தீர்ப்பு என்ற தலைப்பையே வைக்க இருப்பதாக ஒரு புறம் தகவல் பரவி வந்தது. இந்நிலையில் நேற்று படக்குழுவினர் குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று 11 மணிக்கு தளபதி 69 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவதாக அறிவித்திருந்தார்கள். அதன்படி தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கின்றது.
அதன்படி நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 69 திரைப்படத்திற்கு ‘ஜனநாயகன்’ என்கின்ற பெயர் வைக்கப்பட்டிருக்கின்றது. நடிகர் விஜய் தனது கையில் செல்போனுடன் மக்களோடு மக்களாக புகைப்படம் எடுத்துக்கொள்வது போன்ற போஸ்டரை வெளியிட்டு படத்தின் தலைப்பை வெளியிட்டு இருக்கிறார்கள் படக்குழுவினர். மேலும் நாங்கள் அவரை ஜனநாயகன் என அழைப்போம் என்று தெரிவித்திருக்கிறார்கள்.
அமராவதி திரைப்படம்…
நடிகர் விஜயகாந்துக்கும்…
ரசிகர்களால் சூப்பர்ஸ்டார்…
கோலிவுட்டில் உள்ள…
தமிழ் சினிமாவில்…