Cinema News
விஜய் போட்ட கண்டீசன்.. மிஸ்ஸான முரளியின் சூப்பர் ஹிட் படம்! இப்படியெல்லாம் கேட்டாரா?
அப்பாவுக்காக இப்படியெல்லாம் செஞ்சாரா விஜய்.. விளைவு பட வாய்ப்பு போனதுதான் மிச்சம்
தமிழ் சினிமாவில் ஹோமிலி லுக் என நடிகைகளைத்தான் பெரும்பாலும் சொல்வார்கள். ஆனால் நடிகர்களில் ஹோம்லி லுக் அமையப்பெற்ற ஒரு அற்புதமான நடிகர் என்றால் அது முரளிதான். கருநிறமாக இருந்தாலும் இவருக்கு என இப்போது வரை ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள். இவருடைய பல படங்கள் சூப்பர் ஹிட்டாகியிருக்கின்றன. எதார்த்தமான நடிப்பால் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தவர் முரளி.
இவருடைய நடிப்பில் வெளியான படம் சுந்தரா டிராவல்ஸ். படம் முழுக்க நகைச்சுவையை சொட்ட சொட்ட வைத்திருப்பார் இயக்குனர். இந்தப் படத்தை தங்கராஜ் தயாரித்திருந்தார். முதலில் இந்தப் படத்தின் கதை விஜய்க்குத்தான் சொல்லப்பட்டிருக்கிறது. மலையாளத்தில் திலீப் நடித்த ஈ பறக்கும் தாளிகா படத்தின் ரீமேக் தான் சுந்தரா டிராவல்ஸ்.
அதை தமிழில் எடுக்க முயற்சி செய்து தயாரிப்பாளர் தங்கராஜ் அவருடைய கேரியரில் வெற்றியடைய வேண்டும் என நினைத்திருக்கிறார். அதனால் மலையாள படத்தின் கேசட்டை விஜய்க்கு போட்டு காட்டினாராம். அந்தப் படம் விஜய்க்கு மிகவும் பிடித்துப் போக நடிப்பதாக கூறினாராம்.
ஆனால் கூடவே ஒரு வேண்டுகோளையும் விடுத்தாராம். இந்தப் படத்தை என் அப்பாவும் சேர்ந்து தயாரிப்பார் என்று சொல்லியிருக்கிறார். அதற்கு தங்கராஜ் ‘இல்ல தம்பி. சோலோவாக நான் வெற்றியடையனும். அதனால் இந்த கண்டீசனுக்கு என்னால் உடன்பட முடியாது’ என சொல்லி நீங்கள் இந்தப் படத்தில் நடிக்க வேண்டாம் என கூறிவிட்டாராம் தங்கராஜ்.
விஜய்க்கு பிறகு இந்தப் படத்தின் கதை கார்த்திக் போன்ற பல நடிகர்களிடம் சென்று இருக்கிறது. கடைசியாக முரளி அந்த மலையாள படத்தை பார்க்க அவரும் என்னால் நடிக்க முடியாது என சொல்லியிருக்கிறார். அதற்கு காரணம் திலீப்பை போல் என்னால் நடிக்க முடியாது என்பதுதான். இருந்தாலும் தங்கராஜ் ‘ நான் சொல்ற படி நீங்க நடிச்சால் போதும்’ என சொல்லி ஓகே பண்ணியிருக்கிறார்.
அதன் பிறகு வடிவேலுவும் படத்திற்குள் நுழைய படப்பிடிப்பை ஆரம்பித்திருக்கிறார்கள். எல்லாம் முடிந்து படத்தை பார்த்த பலரும் இந்தப் படத்தை வாங்க முன்வரவில்லையாம். வினியோகஸ்தர்களுக்கு படமே பிடிக்கவில்லையாம். படம் ஓடாது என்றுதான் அனைவரும் நினைத்திருக்கிறார்கள். ஆனால் படம் வெளியாகி நல்ல ஒரு வரவேற்பை பெற்றிருக்கிறது. இதை தங்கராஜ் ஒரு பேட்டியில் கூறினார்.