நாமதான் ஓட்டு போட்டோம்!.. நாமலே தூக்கறோம்!.. விஜய் பேசுறது சர்கார் டெலிட்டட் சீன் மதிரி இருக்கே!...

சென்னை: 200 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராக இருக்கும்போதே அரசியலுக்கு வந்திருக்கிறார் விஜய். கோட் படத்தில் 200 கோடி சம்பளம் வாங்கியவர் இப்போது நடித்து வரும் ஜனரஞ்சகன் படத்திற்கு 260 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.
அரசியலில் விஜய்: விஜய் கடந்த சில வருடங்களாகவே தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் அரசியலுக்கு வருவது தொடர்பாக ஆலோசித்து வந்தார். கோட் படத்தில் நடித்து கொண்டிருக்கும்போதுதான் நான் அரசியலுக்கு வருகிறேன். 2026 சட்டமன்ற தேர்தலை குறி வைத்து அரசியல் செய்வேன். நான் ஒப்புக்கொண்டிருக்கும் படத்தை முடித்துவிட்டு தீவிர அரசியலில் இறங்குவேன் என சொல்லியிருந்தார்.
தமிழக வெற்றிக் கழகம்: சொன்னபடியே தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியையும் துவங்கி விக்கிரவாண்டியில் மாநாட்டையும் நடத்தினார். இந்த மாநாட்டில் 8 லட்சத்திற்கும் அதிகமான விஜய் ரசிகர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். விஜய்க்கு இவ்வளவு கூட்டம் கூடியது ஆளும் திமுக அரசுக்கே அதிர்ச்சியை கொடுத்தது.
ரமலான் நோன்பு விஜய்: எனவே, விஜயை நேரிடையாகவும், மறைமுகமாகவும் விமர்சிக்க துவங்கிவிட்டனர். அதன்பின் ஒருபக்கம் அரசியல் வேலைகள் நடக்க ஒருபக்கம் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனரஞ்சகன் படத்தில் நடித்து வருகிறார். நேற்று கூட சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இஸ்லாமிய தோழர்களுடன் ரமலான் நோன்பை விஜய் கடைபிடித்தார். விஜயை பார்க்க இளைஞர்கள் பலரும் முண்டியடிக்க தடுப்புகளை மீறி பலரும் உள்ளே வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மகளிர் தின வாழ்த்து: இந்நிலையில், மார்ச் 8ம் தேதி இன்று மகளிர் தினம் என்பதால் விஜய் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ‘எல்லோருக்கும் வணக்கம். தமிழகம் முழுவதும் இருக்கும் என் அம்மாக்கள், தங்கைகள், தோழிகள் எல்லோருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள். அதேநேரம் மனசுக்குள் மகிழ்ச்சி இருக்கிறதா என்றால் இல்லை. ஏனெனில், பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக இல்லை. நீங்கள். நான் எல்லாம் சேர்ந்துதான் திமுகவுக்கு வாக்களித்து ஆட்சியில் அமர வைத்தோம்.
ஆனால், அவர்கள் இப்படி ஏமாற்றுவார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால், கவலைப்பட வேண்டாம். எல்லாமே மாறும். எல்லாமே மாற்றத்திற்கு உரியதுதான். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் நாம் எல்லோரும் சேர்ந்து மகளிரின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய திமுகவை ஆட்சியிலிருந்து நீக்குவோம்’ என பேசியிருக்கிறார்.
ஆவேசமாக பேச வேண்டிய வசனத்தை ஆட்டுக்குட்டியை தடவியது போல விஜய் பேசும் ஸ்டைலை பார்த்து இது சர்கார் கிளைமேக்ஸ் விஜய் பேசி அதை டெலிட் பண்ண சீன் மாதிரி இருக்கு என விஜய் ஹேட்டர்ஸ் பதிவிட்டு வருகிறார்கள்.