More
Categories: Cinema News latest news

சென்சார் செக் வைத்தும் வெளிவந்த விஜயகாந்த் படம்! கேப்டன் ஹிட் லிஸ்டில் எப்பவுமே ஸ்பெஷலான படம்

விஜயகாந்த் சினிமா வாழ்க்கையையே திருப்பி போட்ட படமாக அமைந்தது 1986 ஆம் ஆண்டு வெளியான ஊமை விழிகள் திரைப்படம். இந்த நேரத்தில் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த படத்தை எடுக்க பெரிய அளவில் ஹிட்டான திரைப்படம்.

கல்லூரி மாணவர்கள் என்றாலே ஆர்ட் ஃபிலிம் தான் எடுப்பாங்க. கமர்சியல் படங்கள் அவர்களுக்கு செட் ஆகாது என்ற ஒரு எண்ணத்தை சுக்குநூறாக்கிய திரைப்படமாக அமைந்தது ஊமை விழிகள் திரைப்படம். விஜயகாந்த் சினிமா வாழ்க்கையை மட்டும் அல்ல ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையே புரட்டிப்போட்ட திரைப்படமாக இந்த ஊமை விழிகள் திரைப்படம் அமைந்தது.

இப்பொழுது எல்லாம் ஷங்கர் ,ராஜமவுலி என பிரம்மாண்டங்களுக்கு இவர்கள் பெயரைத்தான் சொல்லி வருகிறோம். ஆனால் பல பிரம்மாண்டங்களுக்கு பிள்ளையார் சுழி போட்ட படமே இந்த ஊமை விழிகள் திரைப்படம் தான். யாரும் எதிர்பாராத ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் அந்தக்கால காதல் நாயகன் ரவிச்சந்திரன் வில்லனாக நடித்து அனைவரையும் சர்ப்ரைஸ் செய்திருப்பார்.

அவருடைய நடிப்பு இந்த படத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது. விஜயகாந்த் இந்த படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். ஆனால் முதலில் விஜயகாந்துக்கு பதிலாக சிவக்குமார் தான் இந்த கேரக்டரில் நடிக்க இருந்ததாம். ஆனால் இதற்கு விஜயகாந்த் தான் சரியாக இருப்பார் என சிவகுமார் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டார்.

அவர் சொன்னதைப் போல விஜயகாந்த் இந்த கேரக்டராகவே படத்தில் வாழ்ந்திருந்தார். இதன் பிறகு தான் அவருடைய சினிமா கிராபும் படிப்படியாக உயர்ந்தது. இந்த நிலையில் ஊமை விழிகள் திரைப்படம் வெளியான போது அந்த படத்தின் போஸ்டருடன் சேர்த்து தணிக்கை அதிகாரிகள் கொடுத்த சான்றிதழும் சேர்த்து ஒட்டப்பட்டிருந்ததாம்.

அதற்கு என்ன காரணம் என்பதை பிரபல சினிமா தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் கூறியிருக்கிறார். அதாவது ஊமை விழிகள் திரைப்படத்தை தணிக்கை அதிகாரிகள் பார்த்து இந்தப் படம் தடை செய்யப்பட வேண்டிய படம் என்றும் தணிக்கை சான்றிதழ் கொடுக்க முடியாது என்றும் கூறியிருக்கிறார்கள்.

அதன் பிறகு படத்தின் தயாரிப்பாளர் ஆபாவாணன் பலமுறை போராடி தணிக்கை சான்றிதழை இந்த படத்திற்காக பெற்றாராம். இதன் காரணமாகவே தான் படத்தின் போஸ்டருடன் இந்த தணிக்கை சான்றிதழையும் ஒட்டி வெளியிட்டிருக்கிறார்.

Published by
ராம் சுதன்

Recent Posts