கோலிவுட்டில் விதவிதமான கெட்டப்களை போட்டு நடிப்பதில் ஆர்வம் மிகுந்தவர் நடிகர் விக்ரம். தற்போது தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டு வீர தீரன் சூரன் படத்தில் நடித்து வருகிறார். தங்கலான் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது. படத்தை அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரமுடன் மாளவிகா மோகனன் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். கே.ஜி.எஃப்பில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தங்கலான் திரைப்படம் உருவாகியிருக்கிறது. இந்தப் படத்திற்காக விக்ரம் தனது உடலை மிகவும் வருத்தி நடித்திருக்கிறார்.
படப்பிடிப்பிற்காக வெவ்வேறு இடங்களுக்கு சென்ற படக்குழு அங்கு நடக்கவே முடியாத இடத்திற்கும் சென்று படமாக்கியிருக்கிறார்கள். செருப்பு போட்டு கூட நடக்க முடியாத பகுதியாகவே இருந்திருக்கிறது. இருந்தாலும் படத்திற்காக விக்ரம் வெறும் காலுடனேயே நடித்திருக்கிறார்.
இப்படி சினிமாவிற்காக என்ன செய்யவேண்டுமானாலும் அதை செய்பவர் நடிகர் விக்ரம். இந்த நிலையில் தங்கலான் படத்திற்காக இதுவரை இல்லாத அளவு வித்தியாசமான கெட்டப்பை போட்டு நடித்திருக்கிறார் விக்ரம்.
இதனால் அவருக்கு தோலில் அலர்ஜி வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதை பற்றி வலைப்பேச்சு அந்தணனிடம் கேட்ட போது ‘இது எனக்கே புதுதகவலாக இருக்கிறது’ என கூறினார். மேலும் கெட்டப்பை மாற்ற வேண்டும் என்றால் விக்ரமுக்கு அல்வா சாப்பிடுவது போல.
எந்த கெட்டப்னாலும் அதை விரும்பி செய்யக் கூடியவர். அதுவும் தங்கலான் படத்திற்காக மிகவும் வருத்தி நடித்திருக்கிறார். எல்லாருக்குமே ஒரு கட்டத்திற்கு மேல் தோலில் அலர்ஜி ஏற்படும். ஒரு வேளை நீங்கள் சொல்வது உண்மையானால் அது வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்று வலைப்பேச்சு அந்தணன் கூறினார்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…