Categories: Cinema News latest news

அந்த மலையாள படத்தின் ரீமேக்கில் விக்ரம்.. என்ன சிவப்பு மைதான் கொஞ்சம் செலவாகும்!..

Chiyan Vikram: தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்கும் மேலாக ஹீரோவாக நடித்து அசத்தி வருபவர் நடிகர் விக்ரம். என் காதல் கண்மணி என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமான விக்ரம் முதல் திரைப்படத்திலேயே மிகப்பெரிய தோல்வியை சந்தித்தார். அதனைத் தொடர்ந்து காதல் கீதம், மீரா போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தது.

தமிழ் படங்கள் கை கொடுக்காததால் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடிக்க தொடங்கினார். சினிமாவில் அறிமுகமாகி 7 வருடங்கள் ஆகியும் வெற்றி கிடைக்காமல் தவித்து வந்த விக்ரமுக்கு வரமாக அமைந்தது 1999 ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளிவந்த சேது திரைப்படம் தான். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

அதன் பிறகு தொடர்ந்து சினிமாவில் வரவேற்கத்தக்க நடிகராக மாறினார். இவர் நடிப்பில் வெளிவந்த காசி, ஜெமினி, தூள் போன்ற படங்கள் அடுத்தடுத்து வெற்றி படங்களாக அமைந்தன. இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த விக்ரம் அடுத்தடுத்து பெரிய இயக்குனர்களின் திரைப்படங்களில் நடித்த பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுக்க தொடங்கினார்.

இவரது மகன் துருவ் விக்ரம் சினிமாவில் நடிப்பதற்கு வந்து விட்டார். இருப்பினும் தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருகின்றார் நடிகர் விக்ரம். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான தங்கலான் திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இருப்பினும் வசூல் ரீதியாக நல்ல சாதனையை படைத்திருந்தது. மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து வீர தீர சூரன் என்கின்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். இந்த திரைப்படம் வெளியிட்டுக்கு தயாராக இருக்கின்றது. அடுத்ததாக மடோன் அஸ்வின் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கும் விக்ரம் கமிட்டாகி இருக்கின்றார். இப்படி அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வரும் விக்ரம் மலையாள திரைப்படத்தின் ரீமேக்கில் நடிப்பதற்கு ஆசைப்பட்டிருக்கின்றாராம்.

அதாவது ஹனீஃப் அடேனி இயக்கத்தில் நடிகர் உன்னி முகுந்தன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் மார்க்கோ. ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக இடம் பெற்றிருக்கின்றது. இருப்பினும் படம் மலையாளத்தில் சக்க போடு போட்டது. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.

தற்போது ஆக்சன் திரைப்படங்களின் மீது ரசிகர்களுக்கு அதிக மோகம் இருந்து வருகின்றது. அதிக ரத்தம் மற்றும் சண்டை காட்சிகள் இருக்கும் திரைப்படங்களை ரசிகர்கள் ரசித்து பார்த்து வருகிறார்கள். மலையாள சினிமாவில் பொதுவாக இது போன்ற திரைப்படங்கள் வருவது அரிது. ஆனால் தற்போது மலையாள சினிமாவிடம் இது போன்ற திரைப்படங்களை ரசிக்க தொடங்கி இருக்கிறார்கள்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு இருப்பதாக புதிய தகவல் வெளியாகி இருக்கின்றது. இந்த திரைப்படத்தின் வெளியீட்டுக்கு பிறகு நடிகர் விக்ரம் மார்க்கோ படத்தில் நடித்த நடிகர் உன்னி முகுந்தனை நேரில் சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வந்தது. மடோன் அஸ்வின் திரைப்படத்தை முடித்துப் பிறகு நடிகர் விக்ரம் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகின்றது.

Published by
ramya suresh