என்னோட மருந்தே நீங்கதான்!.. ஒரு பக்கத்துக்கு சுந்தர் சிக்கு வாழ்த்து மடல் எழுதிய விஷால்..!

Published on: March 18, 2025
---Advertisement---

Director Sundar C: இயக்குனர் சுந்தர் சி யின் பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் விஷால் ஒரு பக்கத்திற்கு வாழ்த்து மடல் ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். தமிழ் சினிமாவில் 30 வருடங்களாக கமர்சியல் திரைப்படங்களை கொடுத்து மிகச்சிறந்த இயக்குனராக வலம் வருகின்றார் இயக்குனர் சுந்தர் சி. இவருடன் இயக்குனராக இருந்து வந்த பல இயக்குனர்கள் தற்போது சினிமாவில் இருந்து விலகிய நிலையில் இவர் மட்டும் தற்போது வரை தொடர்ந்து சினிமாவை ஹிட் திரைப்படங்களை கொடுத்து இயக்குனராக ஜொலித்து வருகின்றார்.

முறைமாமன் திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து பல திரைப்படங்களை இயக்கியிருக்கின்றார். உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, அருணாச்சலம் என தொடர்ந்து அடுத்தடுத்து கமர்சியல் திரைப்படங்களை இயக்கி வெற்றி பெற்றவர். இவரது திரைப்படங்களுக்கு சென்றால் நிச்சயம் வயிறு குலுங்க சிரித்து விட்டு வரலாம் என்பது ரசிகர்களின் எண்ணம்.

அதற்கு ஏற்ற வகையில் தன்னுடைய திரைப்படங்களை கடந்த 30 வருடங்களாக சிறந்த முறையில் கொடுத்து வருகின்றார் இயக்குனர் சுந்தர் சி. கடந்த ஆண்டு இவரது இயக்கத்தில் வெளிவந்த அரண்மனையில் 4 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதனை தொடர்ந்து இந்த வருடம் பொங்கல் பண்டிகை வெளியான மதகஜராஜா திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது.

கடந்த 2012 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 2013 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருந்தது. நிதி பிரச்சனை காரணமாக இப்படம் அப்போது வெளியாகவில்லை. பலமுறை இந்த திரைப்படத்தை வெளியிடுவதற்கு முயற்சி செய்தபோதும் படம் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் இந்த திரைப்படம் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி திரையரங்குகளில் சக்கபோடு போட்டு வருகின்றது.

இதனை தொடர்ந்து சமீபத்தில் இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இன்று இயக்குனர் சுந்தர் சி தன்னுடைய 57 வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். இவரின் குடும்ப வாழ்க்கையை பொருத்தவரையில் நடிகை குஷ்புவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இவர்களும் விரைவில் சினிமாவில் கால் பதிக்க இருப்பதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் காலை முதலே இயக்குனர் சுந்தர் சி யின் பிறந்தநாளை முன்னிட்டு சினிமா துறையை சேர்ந்த பல பிரபலங்கள் தொடர்ந்து வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் விஷால் மிக எமோஷனலாக தனது வாழ்த்தை சுந்தர்சிக்கு பதிவு செய்து இருக்கின்றார்.

அதில் அவர் தெரிவித்திருந்ததாவது ‘என்னுடைய அன்புக்குரிய சகோதரர், எனக்கு பிடித்தமான இயக்குனர், என் மிகச்சிறந்த நண்பர், என் வாழ்க்கையில் நான் சந்தித்த சிறந்த இயக்குனர்களில் ஒருவரான சுந்தர் சி-க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் நீங்கள் எப்போதும் மென்மேலும் வளர, வெற்றிபெற கடவுளை வேண்டிக் கொள்கின்றேன்.

ஓரு நடிகராக அல்ல உங்கள் குடும்ப உறுப்பினராகவும் உங்களை வாழ்த்துவதற்கு இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கின்றேன். எனக்கு ஒரு சூப்பர் வெற்றியை இந்த வருடத்தின் தொடக்கத்தில் கொடுத்திருக்கிறீர்கள். என்ன நடந்தாலும் மகிழ்ச்சியாக இருக்கவும், மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்தவும் என் மருத்துவர் பரிந்துரைத்ததை விட நீங்கள் எப்போதும் எனக்கு மருந்தாக இருந்திருக்கிறீர்கள்.

உங்கள் பிறந்த நாளை மிகச் சிறப்பாக கொண்டாடுங்கள் என் அன்பு சகோதரரே. தொடர்ந்து சினிமாவில் பல பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்து அனைவரையும் நீங்கள் மகிழ்விக்க வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்’ என்று தெரிவித்து இருக்கின்றார்.

ramya suresh

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment