பெரிய பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் சின்ன பட்ஜெட் படங்களை பெரிய அளவில் பாதித்து வருகிறது. முன்பெல்லாம் ஒரே நேரத்தில் நான்கு ஐந்து படங்கள் எல்லாம் ரிலீஸ் ஆகி இருக்கின்றன. ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஒரு பெரிய நடிகரின் படம் ரிலீஸ் ஆகிறது என்றால் அந்த தேதியில் வேறு எந்த படங்களும் ரிலீஸ் ஆக முடியாத சூழ்நிலை இப்போது தமிழ் சினிமாவில் ஏற்பட்டிருக்கிறது.
அதனால் முன்பே அதற்கேற்றபடி அட்டவணை எல்லாம் போட்டுவிட்டு இந்த இந்த தேதிகளில் இந்த படம் ரிலீஸ் ஆகிறது என சொல்லி விடுகின்றனர். ஆனால் என்ன நடந்தாலும் பரவாயில்லை என கெத்தாக களம் இறங்க காத்திருக்கிறார் நடிகர் பார்த்திபன். ஜூலை 12ஆம் தேதி ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும் திரைப்படம் இந்தியன் 2.
அந்த படம் ரிலீஸ் ஆகும் அதே நேரத்தில் பார்த்திபன் படமான டீன்ஸ் திரைப்படமும் ரிலீஸ் ஆக இருக்கின்றன. இதைப்பற்றி பார்த்திபன் கூறும்போது ‘என்னிடம் நிறைய பேர் ஏன் உனக்கு இந்த வேண்டாத வேலை ‘என கேட்கிறார்கள் .ஏன் ஒரே நேரத்தில் இரு படங்கள் ரிலீஸ் ஆகக் கூடாதா?
இந்தியன் 2 படம் 800 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது என்றால் எனக்கு ஒரு 200 தியேட்டர் இருந்தால் போதும். ஏன் 100 தியேட்டர் கிடைத்தால் போதும் .ஆனால் என் படம் ரிலீஸ் ஆகவேண்டும்.அவ்வளவுதான்’ எனக் கூறியிருக்கிறார் .
இதேபோல் ஒரு நிலைமைதான் விவேக் நடித்த படத்திற்கும் முன்பு நடந்திருக்கிறது. விவேக், சோனியா அகர்வால் லீடு ரோலில் நடித்த பாலக்காடு மாதவன் திரைப்படம். முழு நகைச்சுவை படமாக எடுக்கப்பட்ட இந்த படத்தை 250 தியேட்டர்களுக்கு மேல் தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்ய இருந்தார்களாம்.
கேரள ரைட்ஸ் கர்நாடக ரைட் என பெரிய அளவில் வாங்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த நேரத்தில் ஒரு பெரிய நடிகரின் படம் பாகுபலி படத்தோடு மோதினால் நிலைமை மோசமாகிவிடும் என நினைத்து அந்த பெரிய நடிகரின் படத்தை என் படத்தோடு மோத விட்டார்கள்.
அவ்வளவுதான் என் நிலைமை படுமோசமானது. என் படத்தை வாங்கிய கேரளா ரைட் கர்நாடகா ரைட்ஸ் அனைவருமே அப்படியே திருப்பிக் கொடுத்து விட்டார்கள். 250 தியேட்டருக்கு மேல் ரிலீஸ் ஆக இருந்த என் படம் 100க்கும் குறைவான தியேட்டர்களில் தான் ஓடியது.
அதனால் அந்த பெரிய நடிகரின் படத்தால் என் படம் டோட்டலாக வாஷ் அவுட் ஆனது தான் மிச்சம் என விவேக் கூறிய அந்த வீடியோ இப்போது சோஷியல் மீடியாவில் வைரல் ஆகி வருகின்றது.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…