நான் நடிகனானது ஒரு விபத்து!. என்னுடைய ஆர்வமே வேற!.. மனம் திறக்கும் யோகி பாபு!…

Published on: August 8, 2025
---Advertisement---

Yogi Babu: சினிமா உலகில் ஒரு வாய்ப்பு கிடைத்து தொடர்ந்து படங்களில் நடித்து ஒரு இடத்தை பிடிப்பது என்பது சுலபமில்லை. பல வருடங்கள் போராட வேண்டியிருக்கும். பலரிடமும் வாய்ப்பு கேட்டு அலைய வேண்டும். சினிமாவில் இப்போது முக்கிய இடத்தில் இருக்கும் பல நடிகர்கள் அப்படி வந்தவர்கள்தான்.

இதில் யோகிபாபுவும் ஒருவர். கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்த இவருக்கு ஒரு கட்டத்தில் நடிக்கும் ஆசை வந்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியில் கும்பலில் ஒருவராக நின்றவர்தான் யோகி பாபு. அவருக்கு வந்த வாய்ப்பை கொடுத்தவர் லொள்ளு சபா நிகழ்ச்சியை இயக்கிய ராம் பாலா.

யோகி படத்தில் நடிக்க துவங்கி தொடர்ந்து பல படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். வடிவேலு வாய்ப்பில்லாமல் இருக்க, சந்தானமும், சூரியும் ஹீரோவாக நடிக்கப்போய்விட காமெடிக்கு யாருமே இல்லை என்கிற நிலையில் யோகி பாபு நிறைய படங்களில் நடிக்க துவங்கினார். எனவே, தினமும் இவ்வளவு லட்சம் என சம்பளம் வாங்கும் நடிகராக மாறினார்.

அதேநேரம் யோகி பாபு நடிக்கும் காட்சிகளில் காமெடியே இல்லை. வாய்க்கு வந்ததை அவர் பேசுகிறார். தமிழ் சினிமாவில் காமெடி வறட்சியே நிலவுகிறது என சினிமா விமர்சகர்கள் கூறி வருகிறார்கள். மேலும், ஒரு படத்தின் புரமோஷன் விழாவில் ‘புரமோசனுக்கு வர 7 லட்சம் பணம் கேட்டார்’ என ஒரு தயாரிப்பாளர் சங்க நிர்வாகி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால், யோகி பாபு இந்த புகாரை மறுத்தார். பல தயாரிப்பாளர்கள் எனக்கு சம்பளமே கொடுக்கவில்லை. அதெல்லாம் யாருக்கும் தெரியாது. என்னைப்பற்றி தவறான செய்திகளை பரப்புகிறார்கள்’ என விளக்கம் கொடுத்தார். தற்போது நடிகனாக வேண்டும் என நான் முடிவெடுக்கவில்லை என சொல்லியிருக்கிறார்.

எனக்கு நல்ல வாய்ப்புகளை கொடுத்து தூக்கிவிட்டவர் இயக்குனர் சுந்தர்.சி. மிகவும் கஷ்டப்பட்டு என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறார். எனக்கு இயக்குனராகும் எண்ணமே எனக்கு இல்லை. அடிப்படையில் நான் டயலாக் ரைட்டர். 10 வருடங்களாக எழுத்தாளர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன். எனவே கதைகள் எழுதி கொடுக்க ரெடி. ஆனால், இயக்க விருப்பமில்லை. சினிமாவில் உதவி இயக்குனராக வேண்டும் என்றே ஆசைப்பட்டேன். ஆனால், ராம் பாலா சார்தான் என்னை நடிகனாக மாற்றினார்’ என பேசியிருக்கிறார்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment