ரஜினி இருக்கிறாரோ இல்லையோ? இவர் இருப்பாரு.. ஜெயிலர் 2விலும் களமிறங்கும் அதே நடிகர்
ரஜினியின் நடிப்பில் கடைசியாக ப்ளாக் பஸ்டர் ஹிட்டடித்த திரைப்படம் ஜெய்லர். ஜெய்லர் திரைப்படத்தை நெல்சன் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. அண்ணாத்த படத்திற்கு பிறகு ஒரு வெற்றியை கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த ரஜினிக்கு ஜெய்லர் திரைப்படம் ஒரு வரப்பிரசாதமாகவே மாறியது. அதுவும் பீஸ்ட் பட தோல்விக்கு பிறகு நெல்சன் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
அதன் தாக்கமும் ஜெய்லர் படத்தில் இருந்தது. ரஜினிக்கும் தோல்வியை கொடுத்துவிடுவாரோ என்ற பயம் ரஜினி ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத ஒரு வெற்றிய ஜெய்லர் திரைப்படம் பெற்றது. கமலை வைத்து எப்படி விக்ரம் என்ற மாபெரும் ஹிட்டை லோகேஷ் கொடுத்தாரோ அதே போல் ரஜினிக்கு இந்தப் படம் அமைந்தது.
கிட்டத்தட்ட 700 கோடிக்கும் மேலாக இந்த படம் வசூலில் சாதனை படைத்தது. இந்த நிலையில் ஜெய்லர் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பும் வெளியானது. அதற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் நெல்சன் இறங்கிவிட்டார் என்று சமீபத்தில் யோகிபாபு ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
மேலும் அவர் கூறும் போது நெல்சன் இயக்கிய அனைத்துப் படங்களிலும் அதாவது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், ஜெய்லர் என அனைத்திலும் நான் இருப்பேன் என கூறினார். இதை குறுக்கிட்டு பேசிய தொகுப்பாளர் ஜெய்லர் 2விலும் இருக்கீங்களா? என்று கேட்டார்,
அதற்கு யோகிபாபு ஆமா என்று வாய்தவறி சொல்லியதோடு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய சீக்கிரம் வரும் என்று தெரிவித்தார். மேலும் இப்படியெல்லாம் கேட்பீர்கள் என்றுதான் இயக்குனர்கள் ஆளில்லாத இடத்திற்கு சென்று ஸ்கிரிப்ட் வேலைகளை பார்க்க சென்று விடுகின்றனர் என்றும் கிண்டலாக கூறினார்.
அவர்கள் ஸ்கிரிப்ட் எழுதுகிறார்களோ இல்லையோ நீங்கள் அதற்கு முன் எழுதி விடுகிறீர்களே என்றும் கிண்டல் செய்தார். ரஜினி இப்போது வேட்டையன் திரைப்படத்தை முடித்துவிட்டு கூலி திரைப்படத்தில் பிஸியாக இருக்கிறார். கூலி திரைப்படத்திற்கு பிறகு ஒரு வேளை ஜெய்லர் 2வில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.