மன்னிப்பு கேட்டும் விடாமல் துரத்திய நிருபர்! சொடக்கு போட்டு சம்பவம் செய்த யோகிபாபு..
தமிழ் சினிமாவில் ஹீரோ, ஹீரோயின்களின் கால்ஷீட் கிடைக்கிறதோ இல்லையோ யோகிபாபுவின் கால்ஷீட் கிடைக்கிறது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. சின்ன பட்ஜெட் படங்களில் இருந்து பெரிய பட்ஜெட் படங்கள் வரைக்கும் யோகிபாபுவின் ஈடுபாடு என்பது அதிகமாகவே இருக்கின்றது. ஒரே நாளில் இரண்டு படங்களுக்கு மேல் நடித்து மிகவும் பிஸியான நடிகராக மாறியிருக்கிறார்.
ரஜினி முதல் இளம் தலைமுறை நடிகர்கள் வரை அனைத்து நடிகர்களின் படங்களிலும் யோகிபாபுவை பார்க்க முடியும். எந்த நேரமும் சினிமாவிற்காக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு அற்புதமான கலைஞனாக இருக்கிறார் யோகிபாபு. இந்த நிலையில் சிம்புதேவன் இயக்கத்தில் யோகிபாபுவின் நடிப்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் போட். இந்தப் படத்தில் யோகிபாபுவுடன் இணைந்து மதுமிதா, எம்.எஸ். பாஸ்கரன், போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்திருக்கின்றனர்,
படத்திற்கு இசை ஜிப்ரான். இன்று சென்னையில் படத்திற்கான பிரஸ் மீட் நடைபெற்றது. மாலை 6 மணியில் இருந்து 9 மணி வரை என பத்திரிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டதாம். உடனே பத்திரிக்கையாளர்கள் யோகிபாபு இந்த பிரஸ் மீட்டுக்கு வருவாரா என கேட்டிருக்கிறார்கள். அதற்கு படக்குழு தரப்பிலிருந்து யோகிபாபு வருவதாக கூறினார்களாம்.
ஆனால் சரியான நேரத்திற்கு யோகிபாபுவினால் வரமுடியவில்லையாம். இருந்தாலும் யோகிபாபு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரிடம் ‘விழா முடிவதற்குள் வந்துவிடுவேன். அனைவரையும் சாப்பிட சொல்லுங்கள். அதற்குள் வந்துவிடுவேன்’ என கூறினாராம்.
அவர் சொன்ன மாதிரியே அனைவரும் சாப்பிட்டு முடிக்க யோகிபாபுவும் வந்துவிட்டாராம். பின் நிருபர்கள் தாமதமானதை பற்றி கேட்க அதற்கு யோகிபாபு என்னை மன்னித்துவிடுங்கள் என்று கூறியிருக்கிறார், இருந்தாலும் யோகிபாபுவினால் நாங்கள் இவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது என கடுப்பாகி பேசினார்களாம்.
பல முறை யோகிபாபு மன்னிப்பு கேட்டும் விடாமல் இதை பற்றியே கேட்டிருக்கின்றனர். உடனே யோகிபாபு அனைவருக்கும் கும்பிடு போட்டு மேடையில் இருந்து கீழே இறங்கும் போது ஒரு குறிப்பிட்ட நிருபரை மட்டும் பார்த்து சொடக்கு விட்டு வெளியே வா. வந்து பேசுவோம் என சைகையிலேயே காட்டி சென்றார்.