விஜயுடன் கோவா சென்றதை உறுதி செய்த திரிஷா!.. போட்டோவ பாருங்க!...

Trisha kannan: 22 வருடங்களுக்கு முன்பு மிஸ் மெட்ராஸ் அழகி பட்டம் வாங்கியவர் திரிஷா. சினிமாவிலெல்லாம் நடிக்கமாட்டேன் என பெட்டியெல்லாம் கொடுத்தார். பார்த்தால் ஜோடி படத்தில் சிம்ரனின் தோழிகளில் ஒருவராக ஒரு காட்சியில் நின்று கொண்டிருந்தார். லேசா லேசா படத்தில் கதாநாயகியாக புரமோஷன் ஆனார்.
அதன்பின் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். கில்லி உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். அப்படியே ஆந்திரா பக்கம் போய் அங்கும் சிரஞ்சீவி போன்ற சீனியர் நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்தார். தெலுங்கிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
ஆனால், ஒருகட்டத்தில் திரிஷாவின் மார்க்கெட்டை நயன்தாரா பிடித்துவிட்டதால் நம்பர் 2 இடத்திற்கு இறங்கினார். சில வருடங்கள் படங்கள் இல்லாமல் இருந்தார். பொன்னியின் செல்வன் ஹிட்டுக்கு பின் அவரின் அடுத்த ரவுண்ட் துவங்கியிருக்கிறது. விஜயுடன் கோட், அஜித்துடன் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என நடிக்க துவங்கிவிட்டார்.
ஒருபக்கம் நடிகர் விஜய்க்கு நெருக்கமானவராக திரிஷா இருக்கிறார். இப்போது விஜய் தனது மனைவி, குழந்தைகளை பிரிந்து வாழ்வதாக சொல்லப்படுகிறது. ஒருபக்கம், விஜயும், திரிஷாவும் அடிக்கடி வெளியே சுற்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது வெளியாவதுண்டு.
இதுபற்றி இருவரும் எதுவும் வெளியே பேசுவதில்லை. நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம் கடந்த 12ம் தேதி கோவாவில் நடந்தது. பல வருட காதலனை கரம் பிடித்தார் கீர்த்தி சுரேஷ். அந்த திருமணத்தில் கலந்துகொள்ள விஜய் சென்றார். கூடவே திரிஷாவும் போனார். இருவரும் தனி விமானத்தில் சென்றாக சொல்லப்படுகிறது.
இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஏற்கனவே வெளியானது. இந்நிலையில், கோவாவில் ஹோட்டல் அறையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை திரிஷாவே இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். எனவே, அவர் விஜயுடன் கோவா சென்றது உறுதியாகியிருக்கிறது.