படுக்கையறை காட்சியில் என்ன நியாயம் இருக்கு? அந்தரங்க காட்சியில் நடித்த அஞ்சலிக்கு வந்த சோதனை
அங்காடித் தெரு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. ஒரு சில ஹீரோயின்களை பார்க்கும் போது இவர்கள் கிட்டவே நெருங்க முடியாது போல என்ற உணர்வை ஏற்படுத்தும். ஆனால் அஞ்சலியை பொறுத்தவரைக்கும் நம் பக்கத்து வீட்டு பெண் போன்ற உணர்வுதான் இருக்கும். அதனாலேயே இவருக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர்.
தொடர்ந்து பல நல்ல நல்ல படங்களில் நடித்து வந்த அஞ்சலிக்கு திடீரென ஒரு பிரேக் சினிமாவில் ஏற்பட்டது. குடும்ப பிரச்சினை காரணமாக அந்த இடைவெளி ஏற்பட்டது. எல்லா பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு மீண்டும் சினிமாவில் எண்ட்ரி ஆனார் அஞ்சலி. ஆனால் ஆரம்பத்தில் இருந்த க்ரேஸ் குறைந்தது.
அதனால் தெலுங்கிலும் சில படங்களில் நடிக்க தொடங்கினார். சொல்லப்போனால் இப்போது தெலுங்கில்தான் அதிக படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட அவர் நடித்த வெப்தொடர் பற்றி அஞ்சலி கூறியது ஷாக்கை ஏற்படுத்தியிருக்கிறது.
பகிஷ்கரனா என்ற வெப் தொடரில் ஒரு அந்தரங்க காட்சியில் நடித்தார் அஞ்சலி. அதை பற்றி அவர் கூறும் போது அந்த மாதிரி காட்சியில் நடிக்கும் போது அங்கு இருந்த அனைவரையும் வெளியே அனுப்பி விட்டார்களாம்.
இருந்தாலும் அதில் நடிக்கும் போது கொஞ்சம் கூச்சமாகவும் டென்ஷனாகவும் பயமாகவும்தான் இருந்ததாம். எத்தனையோ நல்ல படங்களில் நடித்தாலும் அந்தந்த கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்து நடித்திருப்பதாக அஞ்சலி கூறினார்.
அதுமட்டுமில்லாமல் அவர் நடித்த எல்லா கதாபாத்திரத்திற்கும் அவர் எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பு கிடைத்திருப்பதாகவும் கூறியிருக்கிறார். இந்த நிலையில் இந்த பதிவை பார்த்த ரசிகர் ஒருவர் ‘எல்லோரையும் அனுப்பிவிட்டு நடித்தீர்களா? நீங்கள் நடித்த படத்தை நீங்கள் யாருடன் நடித்தீர்களோ அவர்கள் மட்டும் தான் திரையரங்குகளில் பார்ப்பார்களா?
நடிப்புத் துறை தவறு என்று சொல்லவில்லை.. எதுவும் தேவை என்று ஒன்று இருக்கிறது. படுக்கை அறை காட்சிகள் தேவையற்றது. அதை நடிப்பதில் என்ன நியாயம் கற்பிக்கிறீர்கள்?’ என கேள்வி கேட்டிருக்கிறார்.