தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். தற்போது எச் வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது அவருடைய கடைசி படம். அதனால் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்தின் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
இந்த படத்திற்குப் பிறகு அரசியலில் முழுவதுமாக தன்னை ஈடுபடுத்த போகிறார் விஜய். அதனால் இந்த படத்திற்குப் பிறகு சினிமாவிற்கு முற்றிலுமாக முற்றுப்புள்ளி வைத்துவிட்டு முழு நேர அரசியல்வாதியாக போகிறார் விஜய். விஜய்க்கு ஜோடி என்றாலே பல நடிகைகள் முண்டியடித்துக் கொண்டு நடிக்க வருவது வழக்கம். அது இப்போது என்று இல்லை. ஆரம்பகாலத்திலிருந்தே விஜய்க்கு என ஒரு தனி கிரேஸ் இருந்திருக்கிறது.
அவருடன் பல நடிகைகளை வைத்து கிசுகிசுக்கள் வந்திருக்கின்றன. இந்த நிலையில் நடிகை அஞ்சு அரவிந்த் விஜய்யுடன் நடித்ததை பற்றி ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். பூவே உனக்காக ஒன்ஸ்மோர் போன்ற திரைப்படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் அஞ்சு அரவிந்த். அந்த படத்தின் வெற்றிதான் அடுத்து ஒன்ஸ்மோர் திரைப்படத்திலும் இவரை விஜய்க்கு ஜோடியாக்க காரணமாக இருந்தது.
இந்த படத்தில் விஜய்க்கும் இவருக்கும் காம்பினேஷன் சீன்கள் நிறைய இருந்திருக்கின்றன. அதனால் கூடவே ரொமான்ஸ் காட்சிகளும் இருந்தது .ஆனால் எனக்கு ரொமான்ஸ் காட்சிகளில் எப்படி நடிப்பது என்று தெரியாது. சில காட்சிகளில் விஜயை கட்டி பிடிப்பது போல இருந்தது. அது கூட எனக்கு தெரியாது .அப்போ அவருடைய அப்பா எஸ் ஏ சந்திரசேகர் தான் விஜயை எப்படி கட்டி பிடிக்க வேண்டும்? எப்படி ரொமான்ஸில் நடிக்க வேண்டும் என சொல்லிக் கொடுத்தார்.
anju aravind
அதுவும் விஜயை அவருடைய அப்பாவே கட்டிப்பிடித்தும் ரொமான்ஸ் செய்வது மாதிரியும் நடித்து காட்டினார் என அஞ்சு அரவிந்த் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார். ஆனால் இப்போது விஜய்க்கு அம்மாவாக நடிக்க சொன்னாலும் கண்டிப்பாக நடிப்பேன். ஏனெனில் ஒன்ஸ்மோர் படத்திற்கு பிறகு விஜயை நான் பார்க்கவே இல்லை. அவரை பார்ப்பதற்காகவாவது அவருக்கு அம்மாவாக நடிக்க சொன்னாலும் நடிப்பேன் என்று அஞ்சு அரவிந்த் கூறியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…