Biggboss tamil: பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் முதன்முதலாக அறிமுகம் செய்தபோது நிகழ்ச்சி தொகுப்பாளராக உள்ளே வந்தவர் கமல்ஹாசன். சொல்லப்போனால் வேறு எந்த நடிகர் இந்த நிகழ்ச்சியை அறிமுகம் செய்து இருந்தாலும் இவ்வளவு வரவேற்பு அந்த நிகழ்ச்சிக்கு கிடைத்து இருக்காது.
கமல் ஒரு புதுமை விரும்பி என்பதும் அவர் பிக்பாஸ் மேடையில் அரசியல் பேசியதும், சொல்லப்போனால் பிக்பாஸ் தொடங்கிய ஒரு வருடத்திலேயே அவர் கட்சி ஆரம்பித்ததும் இந்த நிகழ்ச்சிக்கு பார்வையாளர்களை அதிகரித்தன. சுவாரஸ்யமாக தொகுத்து வழங்கியது, போரடிக்க விடாமல் நிகழ்ச்சியை கொண்டு சென்றது, புத்தக பரிந்துரை என கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பியை உயர்த்திக் கொண்டே சென்றார்.
இந்தியில் சல்மான் கான் 18 வருடங்களாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். எனவே தமிழில் கமலும் அப்படியே தொடருவார். அவர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என பலரும் நினைத்தனர். ஆனால் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என பிக்பாஸ் சொல்வது போல 7வது சீசனுடன் கமலை கழட்டிவிட்டு, விஜய் சேதுபதியை உள்ளே கொண்டு வந்தனர்.
பட்டென பேசுவது, சட்டென நிகழ்ச்சிக்கும் செல்வது என ஆரம்ப வாரத்தில் விஜய் சேதுபதி ஸ்கோர் செய்தார். ஆனால் போகப்போக அவர் பேசுவது ரசிகர்களை எரிச்சல் அடைய வைத்துள்ளது. சொல்லப்போனால் போட்டியாளர்கள் என்ன பேசினாலும் டக்கென கத்தரித்து விடுகிறார். அவர்கள் சொல்ல வருவதை காது கொடுத்து கேட்பதில்லை.
இந்தநிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தர்ஷா குப்தா, ‘விஜய் சேதுபதி பேச விடாமல் அசிங்கப்படுத்துவார். அவரிடம் பேசவே பயமாக இருக்கும்,’ என ஓபனாக பேசியிருக்கிறார்.
சொல்லப்போனால் உண்மையும் அதுதான். போட்டியாளர்களுக்கு வெளியில் நடப்பது என்னவென தெரியாது. அப்படி இருக்கும்போது அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பேசுவதற்கு விஜய் சேதுபதி அனுமதிக்கலாம். இல்லை எனில் பிக்பாஸ் சீக்கிரமே வேறு ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளரை உள்ளே கொண்டு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
தமிழ் சினிமாவில்…
கங்குவா திரைப்படம்…
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை…
இட்லி கடை…
கங்குவா படத்தின்…