Silk Smitha: 80களில் பல படங்களில் வெற்றிக்கு காரணமாக இருந்தவர் சில்க் ஸ்மிதா. ஏனெனில், அவரின் கவர்ச்சிக்கு ரசிகர்களிடம் அவ்வளவு வரவேற்பு இருந்தது. ரஜினி, கமல் போன்றோர் கூட தங்களின் படங்களில் சில்க் ஸ்மிதா சில காட்சிகளில் நடிக்க வேண்டும், அவருடன் ஒரு பாடல் காட்சியில் நடனாமாட வேண்டும் என ஆசைப்படுவார்கள்.
80களில் வெளியான பெரும்பாலான ரஜினி, கமல் படங்களில் சில்க் ஸ்மிதாவின் கவர்ச்சி பாடல் இருக்கும். சில்க் ஸ்மிதா ஆந்திராவில் பிறந்து வளர்ந்தவர். இவரின் தாய்மொழி தெலுங்கு. பள்ளிப்படிப்பை பாதியில் விட்டுவிட்டு குடும்ப சூழ்நிலை காரணமாக சின்ன வயதிலேயே திருமணம் செய்து கொண்டார்.
கணவர் சித்ரவதை செய்தால் அவரை பிரிந்தார் சில்க் ஸ்மிதா. சினிமாவில் நுழைந்து சில நடிகைகளுக்கு மேக்கப் போடும் வேலை செய்து வந்தார். மலையாளத்தில் முதல் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. நடிகர் சக்ரவர்த்தி இவரை தனது வண்டிச்சக்கரம் படத்தில் அறிமுகம் செய்து வைத்தார். அதோடு, சில்க் ஸ்மிதாவுக்கு தமிழ் சொல்லிக் கொடுக்கவும் ஒரு ஆளை நியமித்தார்.
சில்க் ஸ்மிதாவின் உடலமைப்பு, அவரின் வசீகர கண்கள், கொஞ்சிப்பேசும் தமிழ் ஆகியவை ரசிகர்களை சுண்டி இழுத்தது. கமல் ஸ்ரீதேவி நடித்து உருவான மூன்றாம் பிறை படத்தில் கூட சில்க் ஸ்மிதாவுக்கு ஒரு முக்கிய வேடம் கொடுக்கப்பட்டு, ஒரு கவர்ச்சி பாடலும் வைக்கப்பட்டது. அந்த அளவுக்கு அவரின் தேவை சினிமாவுக்கு தேவைப்பட்டது.
சொந்த வாழ்வில் சில ஆண்களை நம்பி மோசம் போனார் சில்க் ஸ்மிதா. 90களில் கூட சில படங்களில் கவர்ச்சி நடனம் ஆடியிருந்தார். 1996ம் வருடம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் மரணம் திரையுலகில் எல்லோருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்நிலையில், சில்க் ஸ்மிதாவின் நெருங்கிய தோழிகளில் ஒருவராக இருந்த டிஸ்கோ சாந்தி சமீபத்தில் சில்க் ஸ்மிதா பற்றி ஒரு முக்கிய தகவலை பகிர்ந்து கொண்டார்.
சில்க் ஸ்மிதா மிகவும் நல்ல பெண். அவரை நான் அக்கா என்றே அழைப்பேன். அப்போதே லட்சங்களில் சம்பளம் வாங்கி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தவர். மாதம் 5 லட்சம் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். பணக்கட்டுக்களின் மீதுதன் படுத்து தூங்குவார். இதை நான் முதலில் பார்த்தபோது மிரண்டு விட்டேன். வாய்ப்பு தேடி அலைந்தபோது என்னை யாரும் ஆதரிக்கவில்லை. அதனால்தான், இப்போது பணக்கட்டுகளின் மீது படுத்திருக்கிறேன் என என்னிடம் சொல்வர் சில்க் ஸ்மிதா’ என டிஸ்கோ சாந்தி கூறியிருக்கிறார்.
எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக…
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…