படம் இல்லைனாலும் பந்தாவுக்கு குறைச்சல் இல்ல போல.. ஹன்சிகாவின் அடாவடியை புட்டுபுட்டு வைத்த தயாரிப்பாளர்
தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ஹன்சிகா சினிமாவிற்கு வந்த ஆரம்பத்திலேயே ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறினார். சின்ன குஷ்பு என்றே அவரை அழைக்கத் தொடங்கினர். கொழுக் மொழுக் உடம்பில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார் ஹன்சிகா.
குழந்தை நட்சத்திரமாக பாலிவுட்டில் அறிமுகமாகி ஏகப்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் ஹீரோயினாக அறிமுகமான முதல் படமாக மாப்பிள்ளை படம் அமைந்தது. முதல் படமே அமோக வரவேற்பை பெற அடுத்தடுத்து உதயநிதி, ஜீவா, விஜய், ஜெயம் ரவி, சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடி சேர்ந்தார்.
அந்த காலத்தில் பிரபு - குஷ்பு ஜோடியை எப்படி கொண்டாடினார்களோ அதே போல் ஜெயம் ரவி - ஹன்சிகா ஜோடி மக்களிடையே பிரபலமானது. அதற்கேற்ற வகையில் தமிழில் ஜெயம் ரவியுடன் தான் அதிக படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார் ஹன்சிகா.
பின் தன் உடம்பை குறைக்கிறேன் என மிகவும் ஒல்லியானார் ஹன்சிகா. அதன் பிறகு சொல்லிக் கொள்ளும்படி படங்கள் ஹன்சிகாவிற்கு அமையவில்லை. திடீரென திருமணம் செய்து கொள்வதாக அறிவித்து சோஹைல் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஹன்சிகா. இவர்கள் திருமணம் ராஜாங்க முறைப்படி கோலாகலமாக நடைபெற்றது.
திருமணத்திற்கு பிறகு ஒரு சில படங்களில் நடித்தாலும் முன்பு இருந்த கிரேஸ் ஹன்சிகாவிற்கு குறைந்துதான் போனது. இந்த நிலையில் பிரபல சினிமா தயாரிப்பாளர் கே. ராஜன் ஹன்சிகாவின் அட்ராசிட்டியை சோசியம் மீடியாவில் புட்டு புட்டு வைத்து தயாரிப்பாளர்களின் நிலைமையை கூறி வருத்தப்பட்டார்.
அதாவது வீட்டில் இருந்து ஏர்போர்ட்டிற்கு பவுன்சர்ஸ் வேணுமாம். ஏர்போர்ட்டில் இருந்து சூட்டிங் ஸ்பாட்டிற்கு பவுன்சர்ஸ் வேண்டுமாம். சூட்டிங்கில் ஏழு பேர் உதவியாளர்களும் இருக்கனுமாம்.ஏன் அவங்க பெரிய தீவிரவாதியா? இவங்களுக்கு தயாரிப்பாளர்கள்தான் காசு கொடுக்க வேண்டுமாம். என்ன இதெல்லாம்?
வாங்குகிற சம்பளத்தில் அவர்கள் கொடுக்க வேண்டும். பவுன்சர்ஸ் , உதவியாளர்கள் என தன்னுடன் அழைத்து வருகிறவர்களுக்கெல்லாம் தயாரிப்பாளர்கள்தான் சம்பளம் கொடுக்க வேண்டுமென்றால் அவர்களின் நிலைமை என்னவாகும்? இதையெல்லாம் நடிகர் சங்கம் தட்டிக் கேட்க வேண்டும். மேலும் தயாரிப்பாளர் சங்கம் திடீரென ஸ்டிரைக் அறிவித்தது கொஞ்சம் அதிர்ச்சியைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது.
அதற்கு முன் நடிகர் சங்கமும் தயாரிப்பாளர் சங்கமும் சேர்ந்து பேசி ஒரு முடிவை எடுக்க வேண்டும். அது ஒத்துவரவில்லை என்றால் கடைசி ஆயுதமாக ஸ்டிரைக்கை அறிவிக்கலாம் என கே. ராஜன் கூறியிருக்கிறார்.