அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் ஜான்விகபூரா? எப்பா அது கதிகலங்க வைத்த படமாச்சே
எத்தனையோ திகில் படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாகி இருக்கின்றன. ஆனால் பெரிய அளவிலும் பயமுறுத்தாத அச்சுறுத்தாத வகையில் இருந்தாலும் பார்க்கும் ரசிகர்களை திகில் அடைய வைத்த திரைப்படம் என்றால் அது ஈரம் திரைப்படம் தான். அறிவழகன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் ஆதி ஹீரோவாக நடித்திருப்பார்.
தண்ணீரை மையமாக வைத்து இந்தப் படம் முற்றிலுமாக ஒரு த்ரில்லிங்கான படமாக வெளியாகி இருக்கும். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தான் இப்போது தயாராக போவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் பரமஹம்சா.
ஈரம் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப் போவதே ஒளிப்பதிவாளர் பரமஹம்சாதான் என சொல்லப்படுகிறது. ஆனால் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தமிழில் உருவாகப் போவதில்லையாம். ஹிந்தியில் தான் இதனுடைய இரண்டாம் பாகம் தயாராக போகிறதாம்.
தமிழில் ஈரம் திரைப்படத்தை பொருத்தவரைக்கும் ஹீரோயினை சுற்றியே படத்தின் கதை அமைந்திருக்கும். அதைப் போல இதனுடைய இரண்டாம் பாகத்தில் ஹிந்தியில் ஹீரோயினாக நடிக்கப் போவது ஜான்வி கபூர் என தெரிகிறது. இதுவரை தமிழில் எந்த ஒரு படங்களிலும் நடிக்காத ஜான்வி கபூர் தமிழில் வெளியான இந்த படத்தின் ஹிந்தி இரண்டாம் பாகத்தில் ஹீரோயினாக நடிக்கப் போகிறார்.
இதுவே தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதற்கு காரணம் ஈரம் திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம். அதனுடைய இரண்டாம் பாகம் எந்த அளவு உருவாகப் போகிறது என்பதை பார்க்கவே ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் இது தமிழில் தயாரானால் கூட நன்றாக இருக்கும். ஏன் இரண்டாம் பாகத்தை ஹிந்தியில் எடுக்கப் போகிறார்கள் என்றும் பல பேர் கேட்டு வருகிறார்கள்.