‘ஜெய்பீம்’ படத்துக்கு பிறகு இதுதான்.. ஜோதிகாவின் வாழ்த்துமழையில் ‘அமரன்’
jyothika watched amaran movie: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படத்தை குடும்பத்துடன் பார்த்திருக்கிறார் சூர்யா. சிவகுமார் ஜோதிகா இவர்களுடன் இணைந்து சூர்யாவும் இந்த படத்தை பார்த்துவிட்டு படக்குழுவை பாராட்டி இருக்கிறார்கள். அது சம்பந்தமான புகைப்படம் தான் இப்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகின்றது.
மறைந்த மேஜர் முகந்த் வரதராஜன் வாழ்க்கையில் நடந்த சில உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது தான் இந்த அமரன் திரைப்படம். அந்தப் படத்தில் அற்புதமான நடிப்பை வழங்கி இருந்தார்கள். படம் வெளியாகி 4 நாள்கள் கடந்த நிலையில் இன்னும் திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கின்றது.
இந்த நான்கு நாட்களில் 130 கோடிக்கும் அதிகமான வசூலை பெற்றிருக்கிறது. சிவகார்த்திகேயனின் சினிமா கேரியரில் இந்த படமும் 100 கோடி கிளப்பில் இணைந்து விட்டது. இந்த நிலையில் படத்தை பார்த்த ஜோதிகா அவருடைய வாழ்த்துக்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
அதில் அமரன் திரைப்படத்திற்கு ஒரு பெரிய சல்யூட். ஒரு வைரத்தை உருவாக்கி இருக்கிறார் ராஜ்குமார் பெரியசாமி என பதிவிட்டு இருக்கிறார் ஜோதிகா. அது மட்டுமல்ல ஜெய் பீம் படத்திற்கு இன்னொரு ஒரு தரமான கிளாசிக் படம் என்றால் அது இந்த அமரன் திரைப்படம் தான் என்றும் சிவகார்த்திகேயனின் தைரியத்தை பாராட்டுகிறேன்.
இந்த கதாபாத்திரத்தில் அவர் நடிப்பதற்கு என்ன மாதிரியான உழைப்பையும் ஆர்வத்தையும் போட்டிருப்பார் என்பதை என்னால் நினைத்துப் பார்க்க முடிகிறது. அதற்கு அடுத்தபடியாக என்னுடைய இதயத்தை பறித்து விட்டார் சாய்பல்லவி. என்ன ஒரு நடிகை. கடைசி பத்து நிமிடத்தில் என்னுடைய மூச்சே நின்று போய்விட்டது.
அந்த அளவுக்கு அற்புதமான நடிப்பை வழங்குகிறார் சாய்பல்லவி என்றும் பதிவிட்டு இருக்கிறார் .அதுபோல மேஜர் முகந்த் வரதராஜன் மற்றும் அவருடைய மனைவி இந்து இவர்களைப் பற்றியும் அவருடைய வாழ்த்துக்களையும் நன்றியையும் இந்த பதிவில் வெளியிட்டு இருக்கிறார் ஜோதிகா. ஒட்டுமொத்தமாக நம்முடைய இந்தியன் ஆர்மிக்கு இந்த ஒரு படம் பெரிய டிரிப்யூட்டாக இருக்கும் என்றும் கூறி ஜெய் ஹிந்த். இந்த ஒரு அற்புதமான படைப்பை யாரும் மிஸ் பண்ணிடாதீங்க என்றும் அவருடைய வேண்டுகோளை கொடுத்திருக்கிறார்.