எனக்கு 20 அவருக்கு 60!.. சினிமா வாழ்க்கை அழிஞ்சதே இதனாலதான்!.. ஓப்பனா சொல்லிட்டாரே கஸ்தூரி..

by சிவா |
எனக்கு 20 அவருக்கு 60!.. சினிமா வாழ்க்கை அழிஞ்சதே இதனாலதான்!.. ஓப்பனா சொல்லிட்டாரே கஸ்தூரி..
X

சென்னை: மிஸ் சென்னை பட்டத்தை பெற்றவர் கஸ்தூரி. இதைத்தொடந்து மாடலிங் துறையில் நுழைந்து அப்படியே சினிமாவிலும் நடிக்க துவங்கினார். 1991ம் வருடம் வெளிவந்த ‘ஆத்தா உன் கோவிலிலே’ படம் முலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். அதன்பின் தொடர்ந்து சினிமாவில் பல படங்களிலும் நடித்தார்.

அமைதிப்படை தாயம்மா: கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். சில படங்களில் ஒரு பாடலுக்கு வந்து கவர்ச்சி நடனமும் ஆடியிருக்கிறார். மணிவண்ணன் இயக்கத்தில் சத்தியராஜ் நடித்த அமைதிப்படை படத்தில் தாயம்மாவாக நடித்திருந்தார். சத்தியராஜிடம் ஏமாந்து கற்பை பறி கொடுத்து இறந்துபோகும் வேடம் இவருக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அல்வாவில் அபினை வைத்து அவரை சத்தியராஜ் ஏமாற்றுவது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பான புகைப்படங்களை இப்போதும் பலர் கஸ்தூரியின் சமூகவலைத்தள பதிவுகளில் போய் பகிர்வது உண்டு. 90களில் பிரபு, சத்தியராஜ், பிரசாந்த் உள்ளிட்ட பலருக்கும் ஜோடியாக நடித்தார். ஒருகட்டத்தில் சினிமாவிலிருந்து விலகி திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி 2 குழந்தைகளுக்கும் தாய் ஆனர்.

சமூக ஆர்வலர்: கடந்த சில வருடங்களாக டிவிட்டரில் சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து களமாடி வருகிறார். திமுக அரசை விமர்சித்து தொடர்ந்து பேசி வருகிறார். எல்லாவற்றை பற்றியும் கொஞ்சம் நக்கலாக பேசி ட்ரோல் சிக்குவார். இவரை திட்டுவதற்கென்றே ஒரு குரூப் இருக்கிறது. திமுக ஆதரவாளர்கள், அஜித் ரசிகர்கள் ஆகியோரோடு அடிக்கடி சண்டையும் போடுவார். தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளிலும் இவரை பார்க்க முடியும்.

கெரியரை காலி செய்த கிசுகிசு: இந்நிலையில், சமீபத்தில் பேசும்போது ‘எனக்கு ஒரே ஒரு வருத்தம் என்னவென்றால் நான் சினிமாவில் நடிச்சது 8 வருடங்கள் மட்டுமே. ஒரு சின்ன கிசுகிசு வந்ததால் என் வீட்டில் நடிக்க வேண்டாம் என சொல்லிவிட்டார்கள். அப்போது எனக்கு 20 வயது. அந்த நடிகருக்கு அப்பவே 60 வயசு இருக்கும். அவர் என்னை வச்சிருக்காரு.. எனக்கு பெரிய வீடு வாங்கி கொடுத்திருக்காரு. துபாயில் செட்டில் பண்ணிட்டாருன்னு கிசுகிசு வந்தது. யாருமே இதை கேள்விப்படல. ஆனா, ஒருத்தர் வந்து என் வீட்டில பத்த வச்சிட்டாரு.. அதோட முடிஞ்சது. நடிப்பெல்லாம் வேண்டாம்னு சொல்லி பேக்கப் பண்ணிட்டாங்க’ என சொல்லியிருக்கிறார்.

Next Story