தாய்ப்பால் குடிச்ச எந்த ஆணும் இப்படி பேசமாட்டான்! வளர்ப்பு சரியில்ல.. பயில்வானை நார் நாராக கிழித்த கஸ்தூரி

by ராம் சுதன் |

பொதுவாக நடிகைகள் என்றாலே சமூகத்தில் ஒரு தவறான அபிப்ராயம் இருந்து வருகிறது. நடிகைகள்னா அப்படித்தான் இருப்பார்ங்கள்.. இப்படித்தான் இருப்பார்கள் என்று ஏதோ ஏதோ கற்பனை செய்து கொண்டு ஒரு சில பேர் தவறாக பேசி வருவதை நாம் பார்த்து வருகிறோம். ஆனால் சினிமாவிற்குள் எங்களுக்கு கிடைக்க வேண்டிய மரியாதையும் கௌரவமும் சரியாக கிடைக்கின்றது. வெளியில்தான் அதுவும் சினிமாவை பற்றி சரியான புரிதல் இல்லாதவர்கள்தான் மட்டமாக பேசி வருகிறார்கள் என நடிகை கஸ்தூரி கூறியிருக்கிறார்.

மேலும் கஸ்தூரிக்கு மேக்கப்பிலிருந்து உடையலங்காரம் மற்றும் எல்லா தேவைகளுக்கும் ஆண்களைத்தான் உதவியாளராக வைத்திருக்கிறாராம். ஆரம்பத்திலிருந்து இன்று வரை அவர்கள்தான் என்னுடன் இருக்கிறார்கள் என்றும் ஒரு நாள் கூட தவறாக என்னிடம் நடந்து கொண்டதில்லை என்றும் கூறியிருக்கிறார். அப்படி இருக்கும் போது சினிமாவிற்குள்ளே இருந்து கொண்டு சினிமாவை பற்றி நன்கு அறிந்த பயில்வான் மட்டும் ஏன் மற்றவர்களின் அந்தரங்கங்களை தொடர்ந்து பேசிக் கொண்டு வருகிறார் என நிருபர் ஒருவர் கஸ்தூரியிடம் கேட்டார்.

அதற்கு கஸ்தூரி ‘அவருக்கு என்ன பசியோ? இருந்தாலும் பசி இருக்கத்தானே செய்யும். பொழைக்க எத்தனையோ வழி இருக்கிறது. அதை எல்லாம் விட்டு ஏன் இந்த வழியை அவர் தேர்வு செய்தார் என்று தெரியவில்லை. பூ வித்து பொழைக்கலாம். ஆனால் அவர் மலத்தை விற்று பொழைக்கிறார்’ என கடுமையாக சாடியிருக்கிறார் கஸ்தூரி.

100ல் ஒரு உண்மையை மட்டும் சொல்லிவிடுகிறார். மீதம் 99 பொய்களைத்தான் சொல்கிறார். மக்களும் அந்த ஒரு உண்மையை வைத்துக் கொண்டு மீதம் சொன்ன எல்லாமே உண்மை என்றுதான் நம்பிவிடுகின்றனர். இந்த மாதிரி வம்புக்கு அலைகிறவர்கள் ஒரு முறை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

எப்பொழுதுமே இந்த மாதிரி விஷயங்களையே தேடி தேடி அலைந்து கொண்டு அதில் ஒரு திருப்தியடைந்து கொள்கிறார். நம்மளை விட மோசமாக இருக்கிறார்கள் என்பதில் ஒரு அற்ப திருப்தி என கஸ்தூரி கூறினார். மேலும் அன்னையர் தினத்திற்காக ஒரு டாக்குமெண்ட்ரியில் நடித்தாராம் கஸ்தூரி. ஆனால் சம்பந்தப்பட்ட நிறுவனம் அதை தவறுதலாக வெளியிட கஸ்தூரியின் ஒரு வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையானது.

இதை ஒரு சமயம் பயில்வான் ‘கஸ்தூரி நிர்வாணமாக நடித்தார்’ என்றெல்லாம் சேனலில் பேசியிருந்தாராம். இதை பற்றியும் கூறிய கஸ்தூரி ‘தாய்மை சரியில்லை என்றுதான் சொல்ல வேண்டும். தாய்ப்பால் குடித்த எந்த ஒரு ஆணும் ஒரு தாயை பற்றி மோசமாக பேசமாட்டான். அப்போ வளர்ப்பு சரியில்லை என்றுதான் கூற வேண்டும்’ என கஸ்தூரி கூறியிருக்கிறார்.

Next Story