தென்னிந்திய சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் நடிகர் கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் டாப் ஹீரோயினாக இருந்து வருகிறார். இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் ரகு தாத்தா திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. அந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் லீடு ரோலில் நடித்தாலும் அவரை மையப்படுத்தி அமையும் கதாபாத்திரத்தில் நடிப்பதால் படம் எதிர்பார்ப்பில் இருக்கிறது.
தற்போது ரகுதாத்தா படத்தின் ப்ரோமோஷனில் கலந்து கொண்டு வருகிறார். சமீபத்தில்தான் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. காமெடி கலந்த திரைப்படமாக இந்தப் படம் அமைந்திருப்பதாக கீர்த்தி சுரேஷ் கூறியிருந்தார். மேலும் அவர் பேட்டிகளில் பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
அதில் அவர் ஹிந்தியில் அறிமுகமாகும் பேபி ஜான் படத்தை பற்றி கூறியிருக்கிறார். தமிழில் விஜய் சமந்தா நடித்து ப்ளாக் பஸ்டர் ஹிட்டடித்த தெறி படத்தின் ரீமேக்தான் அந்த பேபிஜான் திரைப்படம். இதில் வருண் தவான் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
இதன் மூலம் ஹிந்தியில் முதன் முதலில் கீர்த்தி அறிமுகமாகும் திரைப்படமாக இந்த பேபிஜான் திரைப்படம் அமைந்திருக்கிறது. இந்த நிலையில் எங்கு போனாலும் கீர்த்தி சுரேஷிடம் ‘ நீங்கள் ஹிந்தியில் முதன் முதலில் அறிமுகமாகிறீர்களே? அதைப் பற்றி கூறுங்கள் ’ என கேட்டு வருகின்றனர்.
அதற்கு பதில் அளித்த கீர்த்தி சுரேஷ் ‘இதே கேள்வியைத்தான் அனைவரும் என்னிடம் கேட்கிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் அது தமிழ் படம் போலத்தான். ஏனெனில் படத்தின் தயாரிப்பாளர் அட்லீ. இயக்குனர் காளி. dop கிரண். இசையமைப்பாளர் தமன். இப்படி எல்லாருமே நம்மாளுங்கத்தான். ஒரே தமிழ் கூட்டம்தான். வருண்தவான்தான் தனி ஆளு. அதனால் அவருக்குத்தான் இது தமிழில் debut ஆக இருக்கும்’ என கூறியிருக்கிறார்.
இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் கீர்த்தியின் தமிழ் ஆர்வத்தை பாராட்டி வருகிறார்கள். இதை போலவே ரஹ்மான் பாலிவுட், மும்பை என செல்லும் போதெல்லாம் ஹிந்தியில் பெரும்பாலும் பேசமாட்டார்.
முதலில் தமிழில் தான் பேச்சை தொடங்குவார். தமிழன் என்பதை மார்தட்டி சொல்வது போல அவரின் செயல்கள் பெரும்பாலும் இருக்கும் .ஏன் சமீபத்தில் நடந்த அம்பானி வீட்டு திருமணத்தில் கூட தமிழில்தான் பாடினார்.