விஜய்தான் முதன் முதலில் சொன்னார்! அப்படியே நடந்துச்சு.. கீர்த்தி சுரேஷ் சொன்ன சீக்ரெட்

0
146

தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். மிக குறுகிய காலத்தில் தேசிய விருதை பெற்ற நாயகியாகவும் திகழ்ந்து வந்தார். தற்போது ரகுதாத்தா என்ற படத்தில் நடித்து முடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ் அந்தப் படத்தின் புரோமோஷனில் கலந்து கொண்டு வருகிறார். ரகு தாத்தா படத்தை பொறுத்தவரைக்கும் அது காமெடி கலந்த கதையில் அமைந்த படம் என்று சொல்லப்படுகிறது.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரகுதாத்தா திரைப்படம் ரிலீஸ் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் மகாநடி திரைப்படத்திற்காக தேசிய விருது கிடைத்ததை பற்றி சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் சொன்னது மிகவும் வைரலாகி வருகின்றது.

ஆரம்பத்தில் மகாநடி படத்தில் நடிக்கவே மாட்டேன் என சொல்லியிருக்கிறார் கீர்த்தி. அதன் பிறகு அவருடைய நலம் விரும்பிகள் சிலர் படத்தின் கதாபாத்திரத்தை பற்றியும் அதிலுள்ள சவால்களையும் பற்றி கூறி அந்தப் படத்தில் நடிக்க வைத்திருக்கின்றனர்.

படத்தின் ப்ரிவ்யூ ஷோவுக்கு அவருடைய குடும்பம் மற்றும் பிரியா அட்லீ, அட்லீ போன்றவர்கள் எல்லாம் வந்து பார்த்திருக்கின்றனர். படத்தை பார்த்த அட்லீ கீர்த்தியிடம் இது ஒரு கல்ட் படமாக இருக்கும் என்று கூறினாராம்.

மறு நாள் படம் ரிலீஸ். படத்தை பார்த்த அனைவரும் கீர்த்தியை பாராட்டினார்களாம். இவரும் முதல் ஷோவை பார்த்துவிட்டு அன்று மதியமே சர்கார் ஷூட்டிங்கிற்காக செல்ல அங்கு ஒட்டுமொத்த படக்குழுவும் கீர்த்திக்காக காத்துக் கொண்டிருந்தார்களாம்.

அதற்குள் மகாநடி படத்தின் சின்ன சின்ன க்ளிம்ப்ஸ் வீடியோ கீர்த்திக்கு வர அதை முருகதாஸிடம் காண்பித்தாராம். கூடவே விஜயிடமும் கீர்த்தி போட்டு காண்பிக்க அதை பார்த்ததும் விஜய் ‘கண்டிப்பாக நேஷனல் அவார்டு கிடைக்கும்’ என்று சொல்லியிருக்கிறார். உடனே கீர்த்தி சிரிக்க அதற்கு விஜய் ‘ஹேய் நிஜமாத்தான் சொல்றேன்’ என கூறினாராம். இந்தப் படத்திற்கு எனக்கு நேஷனல் அவார்டு கிடைக்கும் என முதன் முதலில் கூறியது விஜய்தான் என கீர்த்தி சுரேஷ் கூறினார்.

google news