ஹீரோயினா? மகளா? ‘தளபதி 69’க்காக மகள் கேரக்டரை டிக் அடித்த மமிதா பைஜூ..ஏன்னு தெரியுமா?

by ராம் சுதன் |

தளபதி 69 படம் நடக்குமா ? நடக்காதா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்து வருகிறது. கோட் திரைப்படம் தான் விஜயின் கடைசி படமாக இருக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் சமீபகாலமாக வருகின்ற செய்தியை பார்க்கும் போது தளபதி 69 திரைப்படம் கண்டிப்பாக இருக்கும் என்றே தெரிகிறது.

தளபதி 69 படத்தில் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டடித்த ஒரு படத்தின் நாயகி நடிக்க இருப்பதாக சமீபத்தில் ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது, அவர் வேறு யாருமில்லை. மமிதா பைஜு. இவர் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த ‘பிரேமலு’ படத்தின் நாயகி. இவர்தான் தளபதி 69 படத்தில் நடிக்க இருக்கிறாராம்.

ஆனால் விஜய்க்கு ஜோடியாக இல்லையாம். விஜய்க்கு மகளாக நடிக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. பிரேமலு படத்திற்கு பிறகு மமிதா பைஜு தமிழ் சினிமாவில் நடிக்க வரமாட்டாரா என அந்தப் படத்தை பார்த்த தமிழ் ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் ஏக்கம் மமிதாவிற்கு தெரிந்ததோ இல்லையோ அதர்வாவுக்கு ஜோடியாக கமிட் ஆனாராம்.

அந்தப் படத்தை லைக்கா தயாரிக்க விக்னேஷ் சிவனின் உதவியாளரான ஆகாஷ் பிரபாகரன் இயக்குவதாக இருந்ததாம். இந்த ஆகாஷ் பிரபாகரன் தான் புற நானூறு படத்தையும் தயாரிக்கிறாராம். அதர்வா மற்றும் மமிதா பைஜூ நடிக்க இருந்தப் படம் முழுக்க அமெரிக்காவில் எடுக்கப்பட இருந்ததாம்.

அதற்கான வேலைகளிலும் படக்குழு இறங்கியிருக்கிறார்கள் . அதுவரை மமிதா பைஜூவிடம் படக்குழு டச்சிலேயே இருந்திருக்கிறார்கள். அந்த நேரத்தில் மமிதா வேறொரு படத்திற்காக இமாச்சலம் செல்ல அவரை தொடர்பு கொள்ளவே முடியவில்லையாம். அதர்வா நடிக்க இருந்தப் படத்தின் படப்பிடிப்பு தேதியும் நெருங்க மமிதாவை நெருங்கவே முடியவில்லையாம்.

அவருக்கான காஸ்டியூம்களில் இருந்து எல்லாம் தயாராக இருக்க நான் இந்தப் படத்தில் நடிக்க மாட்டேன் என சொல்லிவிட்டாராம் மமிதா. ஏனெனில் அவர் ஒரு பெரிய படத்தில் புக் ஆகிவிட்ட்டாராம். இது தெரிந்து அதர்வா படக்குழு கடுப்பாகியிருக்கிறது. அந்த பெரிய படம் வேறெதுவும் இல்லை. தளபதி 69 திரைப்படம்தான். விஜய்க்காக ஹீரோயின் வாய்ப்பையும் தவறவிட்டு மகள் கேரக்டரானாலும் பரவாயில்லை என தளபதி 69 படத்தில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் மமிதா.

Next Story