கமலுக்கு சின்ன வயசு கேரக்டரில் நடிச்சது இந்த நடிகையா? என்ன படம் தெரியுமா?

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:39:00  )

பிரபல நடிகை ஒருவர் கமலுக்கு சின்ன வயசு கேரக்டரில் நடித்தது நான் தான் என கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பொதுவாக சின்ன வயசு கேரக்டரில் நடித்த குழந்தைகள் பெரும்பாலும் வருங்காலத்தில் பெரிய பெரிய ஹீரோக்களாகவோ அல்லது நடிகைகளாகவோ மாற வாய்ப்பிருக்கிறது. அதற்கு உதாரணமாக பல பேரை குறிப்பிடலாம்.

நடிகர் கமல், ஸ்ரீதேவி, மீனா, சிம்பு போன்ற பல நடிகர்கள் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் அனைவரும் போற்றக்கூடிய நடிகர்களாக மாறியிருக்கிறார்கள். அப்படி இன்னும் பல பேர் இருக்கிறார்கள். அதில் கமலின் சின்ன வயது கேரக்டரில் நடித்தது நான் தான் என நடிகை மந்த்ரா கூறியிருக்கிறார். தமிழில் பிரியம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் மந்த்ரா.

அதை தொடர்ந்து ரெட்டை ஜடை வயசு, லவ் டுடே போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். இவருடைய பாடல்கள் பெரும்பாலும் ஹிட்டான பாடல்கள். பிரியம் படத்தில் வரும் தில்ருபா பாடல் இன்றுவரை ரசிகர்களுக்கு மிகவும் ஃபேவரைட்டான பாடலாகும்.அந்தப் பாடலில் மந்த்ரா ஆடிய ஆட்டம் மிகவும் பிடிக்கும் என விஜயே ஒரு முறை கூறியிருப்பதாக மந்த்ராவே கூறினார்.

ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்ற ஆசையில் வந்த மந்த்ரா பல படங்களில் ஒரு செகண்ட் ஹீரோயினாக நடித்தார். இருந்தாலும் ஒரு தவிர்க்கமுடியாத நடிகராக இருந்தார். ராஜா படத்தில் அஜித்துடன் இணைந்து வத்தலகுண்டு பாடலுக்கும் ஆடி நல்ல ஒரு வரவேற்பை பெற்றார். இந்த நிலையில் தான் கமலின் சின்ன வயசு கேரக்டரில் நடித்ததை பற்றி மந்த்ரா ஒரு பேட்டியில் கூறினார்.

கமல், ரஜினி மற்றும் அமிதாப் பச்சன் ஆகிய மூவரும் ஹீரோவாக நடித்த ஹிந்தி படமான கிராஃப்தர் படத்தில் கமலின் சின்ன வயசு கேரக்டரில் மந்த்ராதான் நடித்தாராம். இதை ஒரு விழாவில் கமலிடமே சொல்லி வாழ்த்துக்களை பெற்றாராம் மந்த்ரா. அதுமட்டுமில்லாமல் கமலிடம் உங்க கிட்ட ஒன்னு சொல்லனும். என் கணவர்கிட்டயே இத நான் சொன்னதில்லை என்று சொல்லியிருக்கிறார், அதற்கு கமல் சொல்லுங்கள் என கூற ஐ லவ் யூ என சொல்ல பதிலுக்கு ஐ லவ் யூ டூ என கமல் கூறினாராம்.

Next Story