ரஜினி கூட டூயட் கேட்டதுக்கு படத்துல இருந்து தூக்கிட்டாங்க! டாப் ஹீரோயினுக்கு இந்த நிலைமையா?

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:36:50  )

ரஜினி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தும் அவருடன் ஒரு டூயட் பாடலில் ஆட வேண்டும் என கேட்டதற்காக படத்தில் இருந்து நடிகையை தூக்கிய சம்பவம் இப்போது வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் அனைவருக்கும் பிடித்தமான நடிகராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த்.

அதுவும் இளம் தலைமுறை நடிகர்களுக்கு ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை இல்லாமல் இருக்காது. அந்த அளவுக்கு இப்போதுள்ள தலைமுறை நடிகர்களின் பெரிய கனவே ரஜினியுடன் எப்படியாவது ஒரு ஃபிரேமிலாவது நடிக்க வேண்டும் என்று தான் இருக்கும்.

அந்த வகையில் ரஜினி நடிப்பில் வெளியான பாபா திரைப்படத்தில் நடிகை மந்த்ரா நடிக்க இருந்ததாக சமீபத்திய பேட்டியில் மந்த்ராவே கூறியிருக்கிறார். பாபா படத்தில் நடிகை சங்கவி ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருப்பார். முதலில் அந்த கதாபாத்திரத்திற்கு தேர்வானவர் நடிகை மந்த்ராதானாம்.

ஆனால் மந்த்ரா படத்தின் இயக்குனரிடம் இந்த கேரக்டரில் நடிக்கிறேன். அட்லீஸ்ட் என்னோட கனவில் ரஜினியுடன் டூயட் பாடும் மாதிரியான ஒரு சீன் வைத்தால் நன்றாக இருக்கும் என ஆசைப்பட்டிருக்கிறார். அதற்கு படத்தின் இயக்குனர் அப்படி எல்லாம் வைக்க முடியாது எனக் கூறினாராம் .

ஆனால் மந்த்ரா ஒரு பாடல் காட்சி வைத்தால் தான் ஒரு இரண்டாவது கதாநாயகி என்ற அந்தஸ்து கூட எனக்கு கிடைக்கும் எனக் கூறியிருக்கிறார். ஆனால் இயக்குனர் அப்படி எல்லாம் வைக்க முடியாது என மறுத்துவிட்டாராம். அதனாலேயே பாபா படத்தில் நான் நடிக்கவில்லை என கூறினார்.

மந்த்ரா ஒரு காலத்தில் டாப் ஹீரோயினாக இருந்தவர். பிரியம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான மந்த்ரா தொடர்ந்து ரெட்டை ஜடை வயசு, லவ் டுடே என விஜய் அஜித் படங்களில் நடித்து ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக மாறினார். தமிழ் சினிமாவை பொறுத்த வரைக்கும் மந்த்ராவை ஒரு கிளாமர் நடிகையாக தான் பார்த்தனர்.

ஆனால் தெலுங்கில் அவருக்கு என ஒரு தனி மரியாதையே இருக்கிறது. தெலுங்கில் ஒரு லேடி சூப்பர் ஸ்டார் ஆக இருந்தவர் சௌந்தர்யா. அவருக்கு அடுத்தபடியான அந்தஸ்தில் பார்க்கப்பட்டவர் மந்த்ராதானாம்.

Next Story