Categories: latest news

விவாகரத்து ஆகி இவ்ளோ நாளாச்சு… இன்னும் பாசம் குறையலையே… ராமராஜன் குறித்து நளினி ‘பளிச்’ தகவல்..!

நடிகர் ராமராஜனும், நளினியும் காதல் மணம் செய்து கொண்டவர்கள். இருவரும் 1987ல் திருமணம் செய்து கொண்டனர். 2000த்தில் விவாகரத்து ஏற்பட்டது. நளினி விஜயகாந்த், ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். காவலன் படத்தில் ராமராஜனுடன் இணைந்து நடித்துள்ளார்.

அதே போல தமிழ்த்திரை உலகில் மக்கள் நாயகன் என்று எல்லாராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர் ராமராஜன். இவர் தமிழ் சினிமா உலகில் ஆடை, அழகு போன்ற சம்பிரதாயங்கள் எல்லாம் தேவையே இல்லை. யதார்த்தமான நடிப்பே போதும் என்று புரட்சி செய்து பல வெள்ளிவிழாப் படங்களைக் கொடுத்தவர். நடிகர் மட்டுமல்ல. இவர் இயக்குனரும் கூட.

நளினியைப் பல பொருத்தவரை பக்திப்படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பு தாய்மார்களைப் பெரிதும் கவரும். இயல்பிலேயே கண்ணியமாகப் பேசும் குணம் கொண்டவர். சமீபத்தில் கூட ராமராஜனைப் பற்றி பல கண்ணியமான கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

கேம் ஷோ ஒன்றில் ‘மாங்குயிலே..’ பாடல் போடப்பட்டது. இது என் கணவர் நடித்த படத்தின் பாடல். ‘என் கணவரின் படங்களுக்கு அவரது ரசிகை நான்’ என்றார். அதுமட்டுமல்ல. விஜய் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஷோவில் முருகப்பெருமானின் பக்திமயமான பாடல்களைப் பாடச் செய்தனர்.

அப்போது ‘திருச்செந்தூரில் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்’ என்ற பாடலை ஒரு குழந்தை பாடியது. அப்போது நளின சொன்ன வார்த்தைகள் தான் இவை. ‘இந்தப் பாடலைக் குழந்தை பாடியபோது எனக்கு எங்க ஊரான திருச்செந்தூருக்கே போய்ட்டு வந்த ஃபீல் வந்தது. அவன் அருள் இருந்ததால்தான் என் கணவர் திருச்செந்தூர் தொகுதியில் வெற்றி பெற்றார்’ என பெருமையோடு கூறினார் நளினி.

விவாகரத்து ஆகி ஒரு சில ஆண்டுகளிலேயே பழசை மறந்து புது கல்யாணம் செய்து கொள்ளும் தம்பதியர் மத்தியில் 25 ஆண்டுகள் ஆன பின்பும் தன் கணவரைப் பற்றி மரியாதையுடன் பெருமையாக நளினி சொல்கிறார் என்றால் பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான்.

sankaran v

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

11 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

12 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

12 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

13 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

19 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

20 hours ago