பல தொழில்களில் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ள நயன்தாரா!.. இவ்வளவு இருக்கா!..

Published on: November 7, 2024
---Advertisement---

Nayanthara: கேரளாவில் ஒரு சிறிய தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வேலை செய்து வந்தவர் நயன்தாரா. அதன்பின் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழையவே அவரின் புகைப்படம் ஒன்று வார இதழில் வந்தது. அதைப்பார்த்த இயக்குனர் ஹரி அவர் இயக்கிய ‘ஐயா’ படத்தில் அறிமுகம் செய்து வைத்தார்.

டயானா மரியம் கூரியன் என்கிற பெயரை சினிமாவுக்காக நயன்தாரா என மாற்றிக்கொண்டார். 2வது படமே சந்திரமுகி படத்தில் ரஜினியுடன் ஜோடி போடும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வந்தார். குண்டாக இருந்த தனது உடலமைப்பை ஒரு கட்டத்தில் உடற்பயிற்சி மூலம் குறைத்தார்.

சில சறுக்கல்கள் வந்தது. சினிமாவை விட்டே விலக முடிவெடுத்தார். ஆனால், சினிமா அவரை விடவில்லை. ராஜா ராணி படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். அந்த படம் சூப்பர் ஹிட் அடிக்க தொடர்ந்து பெரிய ஹீரோக்களின் படங்களில் நடித்து அதிக சம்பளம் வாங்கும் நம்பர் ஒன் நடிகையாக மாறினார்.

ரசிகர்கள் இவரை லேடி சூப்பர்ஸ்டார் எனவும் அழைக்க துவங்கினார்கள். ரஜினி, விஜய், அஜித், விக்ரம், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். இயக்குனர் விக்னேஷ் சிவனை காதல் திருமணம் செய்து கொண்டு, வாடகைத்தாய் மூலம் 2 குழந்தைகளுக்கும் அம்மாவாகியிருக்கிறார்.

தனக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் நடித்து வரும் நயன் சினிமாவில் சம்பாதித்ததை வைத்து பல தொழில்களிலும் முதலீடு செய்து வருகிறார். தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி படங்களை தயாரிப்பது, வாங்கி வெளியிடுவது போன்ற வேலைகளை செய்து வருகிறார்.

9 ஸ்கின் என்கிற நிறுவனத்தை துவங்கினார். இது, சரும பராமரிப்பு பொருட்களை விற்பனை செய்கிறது. The Lip Balm Company எனும் லிப்ஸ்டிக் தயாரிக்கும் தொழிலை துவங்கினார். Femi 9 என்கிற நாப்கின் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். மேலும், விக்னேஷ் சிவனுடன் இணைந்து ‘Ticket 9 Event Management’ என்கிற நிறுவனத்திலும் முதலீடு செய்திருக்கிறார்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment