73 வயது நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா!.. இளசிலிருந்து பெருசு வரைக்கும் ஒரு ரவுண்டுதான் போலயே..!

Actress Nayanthara: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. ஐயா என்ற திரைப்படத்தின் மூலமாக தனது திரைப்பயணத்தை தொடங்கிய நடிகை நயன்தாரா 40 வயதை தாண்டிய நிலையில் சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்து வருகின்றார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் பிஸியாக நடித்து வருகின்றார்.
விக்னேஷ் சிவனுடன் திருமணம்: நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்த அந்த ஆண்டு வாடகை தாயின் மூலமாக இரட்டை குழந்தைகளுக்கு தாயானார். ஒரு பக்கம் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் மற்றொரு பக்கம் குழந்தைகளை கவனிப்பது மற்றும் பிசினஸ் என அனைத்திலும் கவனம் செலுத்தி வருகின்றார். தனது கைவசம் மண்ணாங்கட்டி, ராக்காயி உள்ளிட்ட திரைப்படங்களை கையில் வைத்திருக்கும் நடிகை நயன்தாரா மலையாளத்திலும் நடித்து வருகின்றார்.
மம்முட்டியுடன் நயன்தாரா: தற்போது மகேஷ் நாராயணன் இயக்கி வரும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தில் மம்முட்டியுடன் இணைந்து நயன்தாரா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகின்றது. இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நயன்தாரா மற்றும் மம்முட்டி கூட்டணியில் இணையும் நான்காவது திரைப்படம் இதுவாகும். ஏற்கனவே மம்முட்டியுடன் இணைந்து நடிகை நயன்தாரா மூன்று திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். முதன் முதலாக ராப்பகல் என்கின்ற திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தார்கள் . அதனைத் தொடர்ந்து பாஸ்கர் தி ராஸ்கல் என்கின்ற திரைப்படத்தில் நடித்தார்.
கடைசியாக ஏகே சாஜன் இயக்கத்தில் புதிய நியமனம் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த மூன்று திரைப்படங்களுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து தற்போது மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தில் குஞ்சாக்கோ போபனும், பகத் பாசிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
தற்போது கொச்சியில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் வரும் 14ஆம் தேதி முதல் டெல்லியில் அடுத்த கட்டப்படபிடிப்பு நடைபெறும் என்று கூறப்படுகின்றது. நான்காவது முறையாக நயன்தாரா மம்பட்டியுடன் இணைந்து நடிக்கும் திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கின்றது.
தமிழ் சினிமாவில் டாப் நடிகர்கள் தொடங்கி தற்போது வளர்ந்து வரும் நடிகர்கள் அனைவருடனும் நடிகை நயன்தாரா ஜோடி போட்டு நடித்தார். அந்த வகையில் நடிகர் கவின் உடன் கிஸ் என்கின்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு கம்மிட்டாகி இருக்கும் நிலையில் மலையாளத்தில் 73 வயது நடிகருக்கு ஜோடியாக நடிப்பதற்கும் கமிட்டாகி இருக்கின்றார்.