இதுலயே அன்பு கிடைக்குதே... கெரியரே போனாலும் பரவாயில்ல... மனம் திறந்த சாய்பல்லவி..!

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:34:00  )

பிரேமம் திரைப்படத்தின் மூலமாக பல இளைஞர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை சாய் பல்லவி. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் கலக்கி வருகின்றார். தொடர்ந்து ஹோமிலியான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை தன் வசப்படுத்தி இருக்கும் சாய்பல்லவி தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் அமரன் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார்.

இந்த திரைப்படம் வருகிற தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் பிரமோஷன் வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகிறார்கள். நடிகை சாய் பல்லவி அமரன் திரைப்படம் குறித்தும் தனது சினிமா வாழ்க்கை குறித்தும் பல விஷயங்களை போட்டியில் பகிர்ந்து இருந்தார். அதில் 'ராஜ்குமார் சார் அவரின் திரைப்படத்தின் கதையை என்னிடம் கூறும்போது நான் அவரிடம் என்ன இவ்வளவு சிம்பிளாக ரோல் கொடுக்குறீங்க என்று கேட்டேன்.

அவர் நீங்கள் முதலில் முகுந்தன் அவரின் மனைவியை போய் பாருங்கள். அதன் பிறகு ஸ்கிரிப்ட்டை படியுங்கள் என்று கூறினார். நான் இந்துவை சந்தித்த பிறகு எனக்கு இந்த படத்தின் கதை மிகவும் பிடித்து விட்டது. அதற்கு பிறகு தான் இந்த படத்தில் நடிக்க ஓகே சொன்னேன். இந்த திரைப்படத்தில் முகுந்தன் கதாபாத்திரம் எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு இந்து கதாபாத்திரமும் மிக முக்கியம் என்று கூறினார்.

மேலும் பிரேமம் திரைப்படம் வந்த பிறகு சோசியல் மீடியாவில் எனது புகைப்படத்தை டிஸ்ப்ளேவில் வைத்திருந்தார்கள். அது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. முதலில் நான் அழகாக இல்லை என்று ஃபீல் பண்ணி இருக்கிறேன். பின்னர் தான் மலர் கேரக்டரில் ரசிகர்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்பது தெரியவந்தது.

அதன் பிறகு கிளாமர் கதாபாத்திரங்களில் ஏன் நடிப்பதற்கு தயக்கம் காட்டுகிறீர்கள் என்று கேள்விக்கு பதில் அளித்து இருந்த சாய்பல்லவி பிரேமம் திரைப்படத்திற்கு பிறகு ஒரு முறை என்னுடைய டான்ஸ் வீடியோவை பார்த்தேன். அந்த டான்ஸ்க்கு ஏற்ற உடை தான் நான் அணிந்திருந்தேன். ஆனால் அதை ஒரு மாதிரியாக விமர்சித்து பேசி தொடங்கினார்கள். அதற்கு பிறகு தான் இனிமேல் இப்படி நடிக்க கூடாது என முடிவு செய்தேன்.

என் உடலை காட்டி நடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்று தெரிந்தது. நான் தற்போது இருக்கும் முறையிலே என் ரசிகர்கள் என் மீது அவ்வளவு அன்பை கொடுக்கிறார்கள். என்னை நிறைய பேர் ஃபாலோ செய்கிறார்கள். அதற்குப் பிறகு நான் ஏன் கிளாமரில் நடிக்க வேண்டும். இந்த முடிவினால் எனக்கு பெரிய பெரிய நடிகர்களுடன் வாய்ப்பு கிடைக்காமல் போனால் கூட அது பரவாயில்லை. ஒருநாள் தான் வாய்ப்புகள் குறைகின்றது. என் திறமையை நம்பி எனக்கு வாய்ப்பு கொடுப்பவர்களின் படங்களில் நடிப்பேன் என்று சாய் பல்லவி பதிலளித்திருந்தார்.

Next Story