Categories: latest news

இதுலயே அன்பு கிடைக்குதே… கெரியரே போனாலும் பரவாயில்ல… மனம் திறந்த சாய்பல்லவி..!

பிரேமம் திரைப்படத்தின் மூலமாக பல இளைஞர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை சாய் பல்லவி. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் கலக்கி வருகின்றார். தொடர்ந்து ஹோமிலியான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை தன் வசப்படுத்தி இருக்கும் சாய்பல்லவி தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் அமரன் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார்.

இந்த திரைப்படம் வருகிற தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் பிரமோஷன் வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகிறார்கள். நடிகை சாய் பல்லவி அமரன் திரைப்படம் குறித்தும் தனது சினிமா வாழ்க்கை குறித்தும் பல விஷயங்களை போட்டியில் பகிர்ந்து இருந்தார். அதில் ‘ராஜ்குமார் சார் அவரின் திரைப்படத்தின் கதையை என்னிடம் கூறும்போது நான் அவரிடம் என்ன இவ்வளவு சிம்பிளாக ரோல் கொடுக்குறீங்க என்று கேட்டேன்.

அவர் நீங்கள் முதலில் முகுந்தன் அவரின் மனைவியை போய் பாருங்கள். அதன் பிறகு ஸ்கிரிப்ட்டை படியுங்கள் என்று கூறினார். நான் இந்துவை சந்தித்த பிறகு எனக்கு இந்த படத்தின் கதை மிகவும் பிடித்து விட்டது. அதற்கு பிறகு தான் இந்த படத்தில் நடிக்க ஓகே சொன்னேன். இந்த திரைப்படத்தில் முகுந்தன் கதாபாத்திரம் எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு இந்து கதாபாத்திரமும் மிக முக்கியம் என்று கூறினார்.

மேலும் பிரேமம் திரைப்படம் வந்த பிறகு சோசியல் மீடியாவில் எனது புகைப்படத்தை டிஸ்ப்ளேவில் வைத்திருந்தார்கள். அது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. முதலில் நான் அழகாக இல்லை என்று ஃபீல் பண்ணி இருக்கிறேன். பின்னர் தான் மலர் கேரக்டரில் ரசிகர்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்பது தெரியவந்தது.

அதன் பிறகு கிளாமர் கதாபாத்திரங்களில் ஏன் நடிப்பதற்கு தயக்கம் காட்டுகிறீர்கள் என்று கேள்விக்கு பதில் அளித்து இருந்த சாய்பல்லவி பிரேமம் திரைப்படத்திற்கு பிறகு ஒரு முறை என்னுடைய டான்ஸ் வீடியோவை பார்த்தேன். அந்த டான்ஸ்க்கு ஏற்ற உடை தான் நான் அணிந்திருந்தேன். ஆனால் அதை ஒரு மாதிரியாக விமர்சித்து பேசி தொடங்கினார்கள். அதற்கு பிறகு தான் இனிமேல் இப்படி நடிக்க கூடாது என முடிவு செய்தேன்.

என் உடலை காட்டி நடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்று தெரிந்தது. நான் தற்போது இருக்கும் முறையிலே என் ரசிகர்கள் என் மீது அவ்வளவு அன்பை கொடுக்கிறார்கள். என்னை நிறைய பேர் ஃபாலோ செய்கிறார்கள். அதற்குப் பிறகு நான் ஏன் கிளாமரில் நடிக்க வேண்டும். இந்த முடிவினால் எனக்கு பெரிய பெரிய நடிகர்களுடன் வாய்ப்பு கிடைக்காமல் போனால் கூட அது பரவாயில்லை. ஒருநாள் தான் வாய்ப்புகள் குறைகின்றது. என் திறமையை நம்பி எனக்கு வாய்ப்பு கொடுப்பவர்களின் படங்களில் நடிப்பேன் என்று சாய் பல்லவி பதிலளித்திருந்தார்.

ராம் சுதன்

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

5 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

6 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

6 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

8 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

14 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

15 hours ago