அப்ப அதெல்லாம் பொய்யா? சிவகார்த்திகேயனுக்காக தனுஷ் முகத்தில் கரியை பூசிய சாய்பல்லவி…

by ராம் சுதன் |   ( Updated:2024-11-08 12:28:45  )
அப்ப அதெல்லாம் பொய்யா? சிவகார்த்திகேயனுக்காக தனுஷ் முகத்தில் கரியை பூசிய சாய்பல்லவி…
X

Saipallavi: நடிகை சாய் பல்லவி மேடையில் பேசியிருக்கும் ஒரு விஷயம் தற்போது தனுஷ் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.

விஜய் டிவியில் உங்களில் யார் அடுத்த பிரபு தேவா ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் சாய் பல்லவி. அதில் டைட்டல் வின்னராக கூட இல்லாமல் பைனலுக்கு கூட அவர் செல்லவில்லை. இதைத்தொடர்ந்து அவருக்கு மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தமிழ் பெண் என்பதால் தமிழ் ரசிகர்கள் கூட அப்படத்தை கொண்டாடி தீர்த்தனர்.

இதை தொடர்ந்து அவருக்கு மலையாளத்தில் வாய்ப்பு அமைந்தது. அது மட்டுமில்லாமல் தெலுங்கு திரையுலகம் பக்கமும் சாய்பல்லவி தொடர்ந்து நடித்து வந்தார். இதில் ஃபிடா, ஷாம் சிங்க ராய் உள்ளிட்ட திரைப்படங்கள் மிகப்பெரிய சூப்பர்ஹிட்டாக அமைந்தது. தொடர்ந்து தமிழிலும் அவருக்கு சில வாய்ப்புகள் இருந்தது.

sivakarthikeyan

இதில் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2, சூர்யா நடிப்பில் வெளியான என்.ஜி.கே மட்டுமே பெரிய படங்களாக அமைந்தது. அதைத் தொடர்ந்து அவருக்கு தமிழில் வாய்ப்புகள் வரவில்லை. பல வருட இடைவெளிக்கு பின்னர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய அமரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் அவருடைய நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டு, சில இடங்களில் அழ வைத்திருந்தார்.

அமரன் திரைப்படம் 6 நாட்களில் 170 கோடியை தாண்டியிருக்கிறது. பல இடங்களில் சிவகார்த்திகேயனின் மாஸ் ஹிட் திரைப்படம் ஆக அமரன் மாறியிருக்கிறது. இது குறித்த வெற்றி விழாவில் கலந்து கொண்ட சாய்பல்லவி, பேசி இருப்பது தற்போது தனுஷ் ரசிகர்களுக்கு பிரச்சினையாகி இருக்கிறது.

அவர் கூறுகையில் எனக்கு முதல் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படம் ஆக அமைந்தது அமரன்தான். அதுவும் சிவகார்த்திகேயனோடு அமைந்திருக்கிறது. அதுபோல அவருக்கும் தெலுங்கில் முதல் பிளாக்பஸ்டர் திரைப்படம் என்னுடன் அமரன் திரைப்படத்தில் அமைந்துள்ளதாக தெரிவித்தார்.

தனுஷுடன் சாய் பல்லவி நடித்த மாரி 2 மிகப்பெரிய வெற்றி படம் என கூறி வந்த நிலையில் தற்போது சாய் பல்லவியின் பேச்சால் தனுஷ் ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர்.

Next Story