Cinema News
கையில் மாலையுடன் சுத்தும் சாய்பல்லவி! ஃபேசனுக்குனு நினைச்சீங்களா? உண்மையை உடைத்த லிங்குசாமி
சாய்பல்லவி குறித்து இயக்குனர் லிங்குசாமி சொன்ன புதிய தகவல்
அமரன் திரைப்படத்திற்கு பிறகு சாய் பல்லவி மக்கள் மத்தியில் ஒரு நீங்கா இடம் பிடித்து விட்டார். அமரன் திரைப்படத்தில் அவருடைய நடிப்பு அனைவராலும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே சாய் பல்லவிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கும் பட்சத்தில் அமரன் திரைப்படத்திற்கு பிறகு அவருடைய மார்க்கெட் பெரிய அளவில் உயர்ந்திருக்கிறது .
சாய்பல்லவி பெயரைச் சொன்னாலே ஒட்டுமொத்தமாக ரசிகர்கள் கத்த ஆரம்பித்து விடுகின்றனர். அந்த அளவுக்கு அவருக்கு என ஒரு தனி கிரேஸ் இருக்கிறது .மிகவும் எளிமையான தோற்றத்துடன் எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் வலம் வரும் சாய் பல்லவி செலெக்ட்டிவ்வான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
ஒரு படத்தில் நடிக்கும் பட்சத்தில் ஹீரோவுக்கு இணையாக தன்னுடைய கதாபாத்திரம் இருக்கிறதா என்பதை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சாய் பல்லவி. அதில் ஒன்றுதான் அமரன் திரைப்படம். ஹீரோவுக்கு இணையான ஒரு ரோல் என்பதால் இந்த படத்தில் நடித்தேன் என ஒரு பேட்டியில் கூறினார்.
இந்த நிலையில் சமீப காலமாக எப்போதுமே அவர் கையில் ருத்ராட்சை மாலையுடன் இருப்பதைப் பார்க்க முடிகிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் சாய் பல்லவி குறித்து லிங்குசாமி சொன்ன ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. ஒரு சமயம் ஒரே விமானத்தில் லிங்குசாமியும் சாய் பல்லவையும் பயணித்து வந்தார்களாம்.
பின் இருக்கையில் அமர்ந்திருந்த சாய்பல்லவி கையில் மாலையுடன் தியானம் செய்து கொண்டு இருந்தாராம். சிறிது நேரம் கழித்து அவரே லிங்குசாமியை அழைத்து அறிமுகம் செய்து கொண்டாராம். அப்போது லிங்குசாமி நீங்கள் தியானம் செய்து கொண்டிருந்தீர்கள். அதனால் தான் தொந்தரவு செய்யவில்லை. உங்களுக்கு தியானம் செய்வது என்றால் மிகவும் பிடிக்குமோ என கேட்டாராம்.
அதற்கு சாய் பல்லவி ஆமாம் சார். ஆனால் அதற்கான ஒரு சரியான இடம் அமையவில்லை என கூறினாராம். உடனே லிங்குசாமி ஹைதராபாத்தில் இருக்கும் ஒரு ஆசிரமம் பற்றி கூறி அங்கு வாருங்கள் அங்கு வைத்து மீதி பேசிக்கொள்ளலாம் என சொன்னாராம்.
மேலும் அது சம்பந்தமான ஒரு புத்தகத்தையும் கூறி உங்களுக்கு கொடுக்கலாம் என நினைத்தேன். ஆனால் இப்போது என் கையில் இல்லை என சொல்லி அடுத்த முறை பார்க்கும் பொழுது அதைப் பற்றி பேசுவோம் என சென்றுவிட்டாராம் லிங்குசாமி. இது நடந்து நான்கு நாள் கழித்து மீண்டும் ஒரே விமானத்தில் மீண்டும் இருவரும் பயணம் செய்ய சாய்பல்லவியின் கையில் அன்று லிங்குசாமி சொன்ன அந்த புத்தகம் இருந்ததை பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டாராம் லிங்குசாமி .
இதிலிருந்து சாய்பல்லவி தியானம் செய்வதில் தன்னுடைய மனதை அமைதிப்படுத்துவதில் குறிக்கோளாக இருக்கிறார் என்பது தெரிகிறது. அதன் காரணமாகவே தான் கையில் மாலையுடன் சுற்றி வருகிறார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அந்த மாலையை எடுத்து தியான ம் செய்து கொள்கிறார் என இதிலிருந்து தெரிகிறது. அவருடைய புன்முறுவலுக்கும் முகப்பொலிவுக்கும் அவருடைய குணத்திற்கும் இதுவும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.