Samantha: அட்வைஸ் பண்ண ரசிகர்கள்... கடுப்பான சமந்தா கொடுத்த பதிலடி!... அப்படி என்னத்தயா சொன்னீங்க!...

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:28:53  )

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தொடர்ந்து தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்த போதுதான் மிகப் பிரபலமானார். அதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வரிசையாக முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபல நடிகையாக வளம் வந்தார்.

தனது முதல் திரைப்படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகர் நாக சைய்தன்யாவை சமந்தா காதலித்து வந்தார். முதலில் இவர்களின் காதலுக்கு வீட்டில் ஒப்புதல் கிடைக்கவில்லை. இதனால் சில காலம் காத்திருந்தார்கள். பின்னர் இருவரின் காதலுக்கும் கிரீன் சிக்னல் கிடைக்க 2017 ஆம் ஆண்டு கோவாவில் மிகப் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார்கள்.

இந்து முறைப்படியும் கிறிஸ்துவ முறைப்படியும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு நான்கு ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இவர்கள் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். விவாகரத்திற்கு பிறகு சமந்தாவும் நாக சைய்தன்யாவும் தங்களது வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார்கள்.

தொடர்ந்து படங்களில் கமிட்டாகி நடித்த வருகின்றார்கள். இதற்கிடையில் நடிகை சமந்தாவுக்கு மயோசிட்டிஸ் என்ற பிரச்சனை ஏற்பட்டது. இதனால் சமந்தா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார். நடிகர் நாக சைய்தன்யா சோபிதா துளிபாலாவை இரண்டாவதாக திருமணம் செய்ய இருக்கின்றார். இவர்களது நிச்சயதார்த்தம் சிம்பிளாக ஹைதராபாத்தில் நடந்து முடிந்தது.

விரைவில் மிகப் பிரமாண்டமாக திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. நாக சைய்தன்யாவின் இரண்டாவது திருமணம் குறித்து சமந்தாவிடம் தொடர்ந்து பலரும் பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். ஆனால் அதை எதையுமே கண்டு கொள்ளாமல் நடிகை சமந்தா தனது பட வேலைகளிலும், தனது மருத்துவத்தில் மட்டுமே தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றார்.

சிறிது இடைவெளி எடுத்துக்கொண்டு சிகிச்சை பெற்று வந்த சமந்தா மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கின்றார். அந்த வகையில் ராஜ் மற்றும் டி.கே இயக்கத்தில் சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரிஸில் நடித்திருக்கின்றார். இந்த சீரியஸ் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கின்றது. இந்த வெப் சீரியஸில் ஆக்சன் காட்சிகளில் சமந்தா பட்டையை கிளப்பி இருப்பதாக கூறி வருகிறார்கள்.

சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய சமந்தா அவ்வபோது தான் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து வருவார். மேலும் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் அளித்து வருவார். அந்த வகையில் நேற்று ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்த சமந்தா ரசிகர் ஒருவரின் அட்வைஸால் கடுப்பாகி இருக்கின்றார்.

சமீப நாட்களாக நடிகை சமந்தா மிகவும் ஒல்லியான தோற்றத்தில் காணப்படுகின்றார். இதை பார்த்த பலரும் கொஞ்சமாவது வெயிட் போடுங்க என்று தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் ஒரு ரசிகர் கொஞ்சம் வெயிட் போடுங்க என்று அட்வைஸ் கூறி இருக்கின்றார். இதற்கு பதில் அளித்த சமந்தா தசை அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்ட தமக்கு உணவு கட்டுப்பாடு என்பது மிக அவசியம். அதனால் என்னால் மற்றவர்களை போல எல்லா உணவையும் சாப்பிட முடியாது என்று பதிலடி கொடுத்திருக்கின்றார்.

Next Story