Actress Samantha: மாஸ்கோவின் காவேரி என்கிற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் சமந்தா. இவருக்கு எந்த சினிமா பின்னணியும் இல்லை. தமிழில் நடித்துகொண்டே தெலுங்கு படங்களிலும் நடிக்க துவங்கினார். ஒரு கட்டத்தில் இரண்டு மொழிகளிலும் மாறி மாறி நடித்து வந்தார்.
தெலுங்கை விட இவர் தமிழில் நடித்தது குறைவான திரைப்படங்கள்தான். விஜயுடன் தெறி, மெர்சல் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். அதுபோக விக்ரம், சூர்யா, தனுஷ், விஷால் உள்ளிட்ட பலருடனும் நடித்திருக்கிறார். தெலுங்கில் நடிக்கும்போது நாக சைதன்யாவுடன் காதல் ஏற்பட்டு அவரையே திருமணமும் செய்து கொண்டார்.
ஆனால், சில வருடங்களில் அந்த திருமணம் முடிவுக்கு வந்தது. ஹிந்தி வெப் சீரியஸ் ஒன்றில் சமந்தா மிகவும் கவர்ச்சியாக நடித்ததே அதற்கு காரணம் என சிலர் சொன்னார்கள். உண்மையான காரணத்தை இருவருமே சொல்லவில்லை. சமந்தா – நாகசைத்தன்யா விவாகரத்து ஊடகங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டது.
ஆணாதிக்க சிந்தனை கொண்ட பலரும் சமந்தா மீது தவறு இருப்பதாக பேசினார்கள். அதில் சிலருக்கு சமந்தா சரியான பதிலடியும் கொடுத்தார். நாக சைதன்யாவை பிரிந்தபின் திரைப்படங்களில் நடிப்பது, நண்பர்களுடன் நேரம் செலவழிப்பது என பயணித்து வருகிறார். ஒருபக்கம் தோல் நோயாலும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
சமந்தா நடிப்பில் நேரடி தமிழ் படம் வெளியாகி பல வருடங்கள் ஆகிவிட்டது. கடந்த சில வருடங்களாகவே அதிக படங்களில் நடிப்பதில் சமந்தா ஆர்வம் காட்டவில்லை. இதற்கிடையில் அவரின் முன்னாள் கணவர் நாக சைதன்யா நடிகை சோபிதாவை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய சமந்தா ‘ நான் 3 நாட்கள் தொலைப்பேசியை பயன்படுத்தாமல் இருந்தேன். அந்த 3 நாட்கள் நான் யாருடனும் பேசாமல் மவுனமாக இருந்தேன். யாரையும் தொடர்புகொள்லவில்லை. என்னோடு நான் மட்டுமே இருந்தேன். நம்மோடு நாம் தனியாக இருப்பது கஷடமானது. பயங்கரமானது. ஆனால், இப்படி மவுனமாஅக இருப்பது எனக்கு பிடித்திருக்கிறது’ என சொல்லியிருக்கிறார்.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…