என்னது ஷ்ருதிகா பிக்பாஸ் போறாங்களா..? இது நம்ம லிஸ்டிலயே இல்லையேப்பா..!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் ஷ்ருதிகா. குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டிலையும் தட்டி தூக்கினார். தனது சிறப்பான நகைச்சுவை பேச்சால் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமான இவர் அதன் பிறகு மிகப் பாப்புலராக மாறிவிட்டார். இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்திருக்கின்றார்.
அது மட்டும் இல்லாமல் இவர் பலம்பெரும் நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி ஆவார். 2002 ஆம் ஆண்டு சூர்யா கதாநாயகனாக நடித்த ஸ்ரீ என்கின்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். வசந்தபாலன் இயக்கத்தில் ஆல்பம் திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் மலையாளத்தில் சொப்னம் கொண்டு துலாபாரம் என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.
கடைசியாக ஜீவா நடிப்பில் வெளிவந்த தித்திக்குதே திரைப்படத்திலும், கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த நள தமயந்தி திரைப்படத்திலும் நடித்திருக்கின்றார். தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்த இவருக்கு பின்னர் வாய்ப்பில்லாமல் போக திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். திருமணத்திற்கு பிறகு குழந்தையை பெற்றுக்கொண்ட இவர் சினிமாவில் இருந்து விலகி விட்டார். நீண்ட இடைவெளிக்குப் பிறகுதான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் விதவிதமான புகைப்படங்களை எடுத்து சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருவார். இந்நிலையில் அவர் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கின்றார். இந்த வீடியோவில் அவர் தெரிவித்திருந்ததாவது: "குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் எனக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்திருந்தீர்கள்.
அதனால் மட்டும் தான் நான் வெற்றி பெற்றேன். உங்களுடைய சப்போர்ட் எனக்கு ரொம்ப முக்கியம். நீங்கள் தொடர்ந்து எனக்கு சப்போர்ட் செய்வீர்கள் என்ற நம்பிக்கையில் ஒரு பாப்புலர் டெலிவிஷன் நிகழ்ச்சிக்கு செல்ல இருக்கின்றேன். உங்களை நம்பி மட்டும்தான் இந்த நிகழ்ச்சிக்குள் நான் செல்கின்றேன். உங்களின் ஆதரவு எப்போதும் எனக்கு இருக்க வேண்டும்" என்று கூறியிருக்கின்றார்.
இதை பார்த்து ரசிகர்கள் பலரும் நீங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல போகிறீர்களா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால் அதில் ஒரு ட்விஸ்ட் உள்ளது. அதாவது அவர் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லவில்லை. ஹிந்தி பிக் பாஸ் 18 சீசன் நிகழ்ச்சிக்கு செல்கின்றார் என்று சமூக வலைதள பக்கங்களில் தகவல் வெளியாகி வருகின்றது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.