ஜெய் ஒரு பிளே பாய்!.. பக்கா ஊமை குசும்பு!.. கவர்ச்சி நடிகை இப்படி சொல்லிட்டாரே!..

சென்னை: இசையமைப்பாளர் தேவாவின் நெருங்கிய உறவினர் ஜெய். விஜய் நடித்த பகவதி படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். இந்த படத்தில் அவருக்கு நடிப்பே வரவில்லை. எதையோ செய்து சமாளித்தார். அதன்பின் வெங்கட்பிரபு இயக்கிய சென்னை 28 படம் அவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது.
அடுத்த படமே சுப்பிரமணிபுரம் படத்தில் வாய்ப்பு. சசிக்குமார் முதன் முதலில் இயக்கிய இந்த படத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பை ஜெய் சரியாக பயன்படுத்திகொண்டார். இந்த படம் மூலம் தன்னால் நன்றாக நடிக்க முடியும் எனவும் காட்டினார். அதன்பின் வெங்கட்பிரபு இயக்கிய சரோஜா, கோவா போன்ற படங்களில் நடித்தார்.
ஒருகட்டத்தில் தனி ஹீரோவாக நடிக்க துவங்கினார். அவள் பெயர் தமிழரசி, கனிமொழி, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, வடகறி, வலியவன் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார். நயன்தாரா நடித்து வெளியான அன்னப்பூரணி படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
நடிகை அஞ்சலியை காதலித்து வந்தார். ஆனால், சில காரணங்களால் அது பிரேக்கப் ஆகிவிட்டது. நண்பர்களுடன் சேர்ந்து நட்சத்திர ஹோட்டல்களில் பார்ட்டிகளில் மது அருந்திவிட்டு காரை ஓட்டி சில முறை போலீஸ் அதிகாரிகளிடம் சிக்கியிருக்கிறார். ஒருமுறை ஃபுல் மப்பில் அடையாறு அருகே காரில் மயங்கியும் கிடந்தார் என செய்திகள் வெளியானது.
கடந்த 2 வருடங்களாக எந்த படத்திலும் நடிக்கவில்லை. ஒருபக்கம், 40 வயது ஆகியும் இதுவரை அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. முரட்டு சிங்கிளாக வலம் வருகிறார். இந்நிலையில், ஜெய்யை பற்றி கவர்ச்சி நடிகை சோனா ஊடகம் ஒன்றில் பேசியிருக்கிறார்.
ஜெய் ஒரு பிளே பாய். பக்கா ஊமை குசும்பு. நல்ல பையன்தான். ஆனா அவன் பாதையை ஏன் மாத்துனான்னு எனக்கு தெரியல. நல்லதான் படம் பண்ணிட்டு இருந்தான். ஆனா இப்போ கேள்விப்பட்ட வரைக்கும் நல்லா இல்லைன்னுதான் சொல்றாங்க’ என அக்கறையோடு பேசியிருக்கிறார். சோனா வெங்கட்புரபுவின் நண்பர்கள் குரூப்பில் இருந்தவர். அப்படித்தான் பிரேம்ஜி. ஜெய் உள்ளிட்ட எல்லோரிடமும் பழகினார் என்பது குறிப்பிடத்தக்கது.