Categories: Cinema News latest news

உன்ன வச்சிக்கிறேன்னு நிறைய பேர் சொன்னாங்க!.. பகீர் கிளப்பும் கவர்ச்சி நடிகை சோனா!…

சென்னை: 2001ம் வருடம் முதல் சினிமாவில் நடிக்க துவங்கியவர் சோனா ஹைடன். இவர் முதலில் நடித்த திரைப்படம் அஜித் நடித்த பூவெல்லாம் உன் வாசம். அதன்பின் ஷாஜகான், சிவப்பதிகாரம், கேள்விக்குறி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார். பெரும்பாலும் கவர்ச்சி வேடத்தைத்தான் இவருக்கு இயக்குனர்கள் கொடுப்பார்கள்.

பாலியல் தொழிலாளி: இதில், ஆதி அறிமுகமான மிருகம் திரைப்படத்தில் பாலியல் தொழிலாளியாக சிறப்பாக நடித்திருந்தார். அந்த படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. ஒருபக்கம் தெலுங்கு படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார். சில மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார். பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடித்த குசேலன் படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்திருப்பார்.

ரஜினியின் குசேலன்: வீட்டிற்குள் கவர்ச்சி உடையணிந்து சோனா உடற்பயிற்சி செய்வதை ஜன்னல் வழியாக பார்த்து ஜொள்ளுவிடுவார் வடிவேலு. அப்போது அங்கு வரும் போலீஸ் அதிகாரியான மனோபாலாவும் சோனாவின் அழகில் மயங்கி ஜொள்ளுவிடுவது போல காட்சிகள் வரும். 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார் சோனா. இவரைப்பற்றி பல வதந்திகளும் அவ்வப்போது வெளியே வரும்.

பிரேம்ஜியுடன் காதல்: பல வருடங்களுக்கு முன்பு ஆண்களுடன் உறவு வைத்துக்கொள்வது என்பது எனக்கு காபி சாப்பிடுவது போல என ஊடகம் ஒன்றில் சோனா சொன்னதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. மேலும், இயக்குனர் வெங்கட்பிரபுவின் தம்பி பிரேம்ஜிக்கும் இவருக்கும் காதல் இருந்தது என்றெல்லாம் சொன்னார்கள்.

ஆனால், அதை மறுத்த சோனா வெங்கட்பிரபு நண்பர்கள் டீமில் நானும் இருக்கிறேன். பிரேம்ஜி எனக்கு நல்ல நண்பன் மட்டுமே. அவன் ஒரு மீசை வைத்த குழந்தை என சொன்னார். மேலும், ஊடகம் ஒன்றில் பேட்டி கொடுத்த சோனா பல முக்கிய தகவல்களை பகிர்ந்து வருகிறார்.

உன்ன வச்சுக்குறேன்: நான் கவர்ச்சி காட்டி நடிப்பதலோ என்னவோ யாரும் என்னை திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை என நினைக்கிறேன். பலரிடம் என்னிடம் வந்து ‘உன்ன வச்சுக்கிறேன்’ என சொல்வார்களே தவிர ‘உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்’ என சொல்ல மாட்டார்கள். அப்படி சொன்ன சிலரை பார்த்து கத்தியிருக்கிறேன். சண்டையும் போட்டிருக்கிறேன். சில சமயம் அவர்களை அப்படியே பார்த்து கொண்டிருப்பேன். ‘இப்படி கேட்க அவர்களுக்கு எப்படி மனம் வருகிறது?’ என்று யோசிப்பேன்’ என ஃபீல் பண்ணி பேசியிருக்கிறார்.

Published by
சிவா