எனக்காக தனியா ஃபிளைட் புடிச்சி வந்த ஸ்ரீதேவி! வெங்கட் பட் சொன்ன சீக்ரெட்
80களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி என பல மொழிகளில் ஒரு முன்னணி நடிகையாக இருந்தவர். தமிழில் பெரும்பாலும் ரஜினி கமல் இவர்களுக்கு ஜோடியாகத்தான் ஸ்ரீதேவி நடித்திருக்கிறார்.
இவர்களின் ஆஸ்தான ஹீரோயினாக வலம் வந்தார் ஸ்ரீதேவி. அந்த காலத்தில் ரஜினியும் கமலும் ஸ்ரீதேவியை பொண்ணு கேட்டு போனதாக செய்திகளும் உள்ளன. ஸ்ரீதேவியை பொருத்தவரைக்கும் அவருடைய அம்மா பேச்சை மீறாதவர்.
தன்னுடைய அம்மா என்ன சொல்கிறாரோ அதைத்தான் கடைசி வரை கேட்டு நடந்தவர். அதனால் தான் பிரபல திரைப்பட இயக்குனரான போனி கபூர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றாலும் அவர் அம்மா சொன்னதின் பெயரில் அவரை திருமணம் செய்து கொண்டார் ஸ்ரீதேவி.
திருமணத்திற்கு பிறகும் ஒரு சில படங்களில் நடித்து வந்தார். தமிழை விட ஹிந்தியில் ஒரு டாப் நடிகையாக அறியப்பட்டார். இந்த நிலையில் தனக்கும் ஸ்ரீதேவிக்கும் இடையே இப்படி ஒரு பந்தம் இருக்கிறது என பிரபல சமையல் நிபுணரான வெங்கட் பட் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் வெங்கட் பட். இவருடைய சமையல் என்றால் ஸ்ரீதேவிக்கு மிகவும் பிடிக்குமாம் .கார்கில் போர் முடிந்து நம்முடைய ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ஸ்ரீ நகரில் ஒரு விழா ஏற்பாடு செய்திருந்தார்களாம்.
அங்கு ஸ்ரீதேவி கலந்து கொள்ள சென்றாராம் .அதை முடித்துவிட்டு திரும்பும் போது வெங்கட் பட்டுக்கு போன் செய்து எனக்காக எனக்கு பிடித்த சமையல் உணவுகளை சமைத்து வைக்கும்படியும் இரவு இரண்டு மணிக்கு நான் அங்கு வந்து விடுவேன் அதற்குள் ஏற்பாடு செய்து வைக்கும் படியும் தொலைபேசியில் கூறினாராம் ஸ்ரீதேவி.
அவர் சொன்னதைப் போல மும்பையில் இருந்து தனியாக சார்ட்டட் பிளைட் பிடித்து வெங்கட் பட் சமைத்த உணவை சாப்பிட்டு சென்றாராம் ஸ்ரீதேவி. இதை சமீபத்திய ஒரு பேட்டியில் வெங்கட் கூறியிருக்கிறார்.