Thuglife: அடுத்த 'கண்ணாளனே' ரெடியாயிடுச்சு போலேயே!... தக் லைஃப் படத்தின் அப்டேட் கொடுத்த த்ரிஷா...!

by ராம் சுதன் |

சவுத் இந்தியன் குயின் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருபவர் நடிகை த்ரிஷா. தொடர்ந்து ஏகப்பட்ட திரைப்படங்களை தனது கையில் வைத்திருக்கிறார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் மீண்டும் பிரபலமாகி இருக்கின்றார். இந்த திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாகி இருக்கின்றார் நடிகை திரிஷா.

நடிகர் விஜய் நடிப்பில் லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்திற்கு பிறகு நடிகர் அஜித்துடன் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். தற்போது அவரின் குட் பேட் அக்லி திரைப்படத்திலும் நடிகை திரிஷா நடித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. மேலும் மணிரத்தினம் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் திரைப்படத்திலும் நடிகை திரிஷா நடித்து வருகின்றார்.

பல வருடங்களுக்கு பிறகு கமலஹாசனும் மணிரத்தினமும் இணையும் திரைப்படம் தக் லைஃப். இந்த திரைப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கின்றது. நடிகை திரிஷா மணிரத்தினம் இயக்கத்தில் ஏற்கனவே ஆயுத எழுத்து, பொன்னின் செல்வன் 1 மற்றும் 2 ஆகிய படங்களில் நடித்திருக்கின்றார். இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை திரிஷா நடித்து வருகின்றார்.

மேலும் அவருக்கு ஜோடியாக சிம்பு நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது. சிம்புவும் த்ரிஷாவும் இணைந்து கடைசியாக விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருந்தார்கள். தற்போது பல ஆண்டுகள் கழித்து தக் லைஃப் திரைப்படத்தில் ஜோடியாக நடித்த வருகிறார்கள்.

சிலம்பரசன் மற்றும் த்ரிஷா இணைந்து நடனம் ஆடுவது போல் ஒரு ரொமாண்டிக் பாடல் இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கின்றது. இந்நிலையில் நடிகை திரிஷா தற்போது தக் லைஃப் திரைப்படத்திலிருந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கின்றார். அதனை இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து மும்பையில் ஒரு அழகிய பாடல் எடுக்கப்பட்டு வருவதாக கூறியிருக்கின்றார்.

மணிரத்தினம் இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் மிகச் சிறந்த பாடல். இது பாம்பே படத்தில் கண்ணாளனே என்ற பாடல் எந்த அளவுக்கு இருந்ததோ அதேபோன்று இப்பாடலும் இருக்கும் என்று மறைமுகமாக அந்த பாடலை வெளியிட்டு கூறியிருக்கின்றார் நடிகை திரிஷா.

Next Story