நடிகை திரிஷா: தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி போட்டு நடித்து பிரபலமானவர். தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கிலும் சிறந்த நடிகையாக வலம் வந்தார். பின்னர் புது நடிகைகளின் வரவு காரணமாக மார்க்கெட் இழந்து பீல்ட் அவுட்டாகி இருந்த திரிஷாவை மணிரத்னம் மீண்டும் பிரபலமாகிவிட்டார்.
தான் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தை கொடுத்து அனைவரையும் திரிஷா பக்கம் திருப்பி விட்டார் மணிரத்னம். பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்குப் பிறகு நடிகை திரிஷாவுக்கு எல்லாமே டாப் கியர் தான். தொடர்ந்து மீண்டும் சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலிக்க தொடங்கி விட்டார்.
நடிகர் விஜயுடன் லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து நடிகர் அஜித்துடன் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கின்றார். அடுத்ததாக அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்திலும் நடித்து வருகின்றார். இது இல்லாமல் மணிரத்னம் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைப் திரைப்படத்திலும், சிம்புவுக்கு ஜோடியாக நடித்து வருவதாக கூறப்படுகின்றது.
இப்படி தொடர்ந்து தமிழ் சினிமாவில் மீண்டும் டாப் நடிகர்களுடன் ஜோடி போடத் தொடங்கிவிட்டார் திரிஷா. தமிழை தாண்டி தெலுங்கிலும் ஏகப்பட்ட திரைப்படங்களை தனது கைவசம் வைத்திருக்கின்றார். இந்நிலையில் நடிகை திரிஷா தற்போது நடிகர் சூர்யாவுடன் இணைந்து சூர்யா 45 என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இருவரும் இணைந்து நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தை இயக்குனர் ஆர்.ஜே பாலாஜி இயக்கி வருகின்றார். படம் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகின்றது. இப்படத்தில் நடிகை திரிஷா லாயர் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் நடிகை திரிஷா மருதமலை முருகன் கோயிலுக்கு சென்று முருகனை தரிசனம் செய்திருக்கின்றார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் சூர்யாவின் பழக்கம் சூர்யாவுடன் இணைந்து நடிப்பதால் அவரின் பழக்கம் திரிஷாவுக்கு ஒட்டிக் கொண்டது போல.
சூர்யா தான் சமீப நாட்களாக அடுத்த படமாவது ஹிட்டாக இருக்க வேண்டும் என்று கோயில் கோயிலாக சுற்றி வருகின்றார். தற்போது நடிகை திரிஷாவும் அவரை போலவே கோயிலுக்கு செல்ல தொடங்கி விட்டார். திரிஷாவின் ராசியாவது சூர்யாவுக்கு வொர்க் அவுட்டாக வேண்டும். அடுத்த படம் நிச்சயம் அவருக்கு வெற்றி படமாக இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…